SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்: அசாம் முதல்வர் பேச்சு

2022-01-18@ 11:13:01

கவுகாத்தி :  தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம் என்று அசாம் முதலமைச்சர் ஹேம்நாத் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தனிப்பட்ட நபரின் விருப்பத்திற்கு மாறாக யாரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது என்றும் எந்த வித நடவடிக்கைக்கும் தடுப்பூசி சான்றிதலை வைத்திருக்க வேண்டும் என எந்த விதிமுறைகளையும் விதிக்கவில்லை' என்றும் மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம் என்று அசாம் முதல்வர ஹேம்நாத் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, 'கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமில்லை. ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கூட்டங்களில் பங்கேற்க முடியாது. அலுவலகங்கள், உணவகங்களுக்குள் நுழைய முடியாது. தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம். அசாமில் தேவைப்பட்டால் மக்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டும்’ என்றார்.    

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்