SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலையின் பல கட்சி அலுவலகங்கள் பூட்டு போடும் நிலைக்கு சென்றிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-01-18@ 02:25:54

‘‘கோயம்பேடு கட்சி பல மாவட்டங்களில் தடுமாறி வருதாமே, ஏதாவது ஒரு மாவட்ட விவகாரத்தை சொல்லுங்க பார்ப்போம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மனுநீதி சோழன் மாவட்டத்தில் கோயம்பேடு கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்து வந்த ஜி என்ற எழுத்தை தன் பெயரில் கடைசியில் கொண்டவர். இவர் கடந்த வருடத்திற்கு முன்னர் இலை கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இதை தொடர்ந்து கோயம்பேடு கட்சிக்காரருக்கு மாவட்ட செயலாளராக சிக்கல் கோயிலின் முருகன் பெயரை கொண்டவர் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் கார் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார். அது முதல் கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார். தற்போது உடல்நலம் தேறி மீண்டும் கட்சி பணிகளை துவங்கியுள்ள நிலையில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்சி பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டினார். வரும் தேர்தலில் கோயம்பேடு கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக தலைமை அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கூட்டணி இல்லாமல் எப்படி தேர்தலில் போட்டியிடுவது, கையில் காசும் இல்லை கூட்டணியும் இல்லை. எனவே அனைத்து இடங்களிலும் போட்டியிடுவது என்பது மிக மிக கடினம். எனவே பெயரளவில் போட்டியிடலாம். அந்தவகையில் திருவாரூர் நகரில் உள்ள 30 வார்டுகளில் 15 வார்டுகளில் போட்டியிடலாம். இதேபோன்று மாவட்டம் முழுவதும் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் போட்டியிட முடியும் என கட்சி பொறுப்பாளர்கள் தெரிவித்த நிலையில் இதனை கேட்ட மாவட்டசெயலாளர் மிகவும் அதிர்ந்து போனார். ஒரு காலத்தில் எதிர் கட்சியாக விளங்கிய நமது கட்சிக்கு தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவதற்கு கூட வேட்பாளர்கள் இல்லையா என அந்தக் கூட்டத்தில் மிகவும் ஆதங்கப்பட்டு கொண்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அரசியல்வாதிகளிடமே கரன்சி கறக்கும் காக்கி அதிகாரியின் ‘கெத்து’ பற்றிச் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தின் பெயரிலேயே வளமான நூறுரூபாய் நோட்டு பெயரைக்கொண்ட காவல்நிலைய பெண்காக்கி அதிகாரி கல்லாகட்டி வருகிறாராம். புதுச்சேரி எல்லைப்பகுதியில் உள்ள இந்தகாவல்நிலையத்தில் நல்லவருவாய் இருக்கும் ஆசையில்வந்த 2 எழுத்துபெயரைக்கொண்ட அவருக்கு, மாவட்ட காவல் துறை அதிகாரியின் கிடுக்குப்பிடியால் பெரும் ஏமாற்றம்தானாம். வாடகைக்கு வீடு பார்க்க செல்பவர்களிடம் ஒரு வார்த்தையை அடிக்கடி சொல்வார்கள்... இருப்பவனுக்கு ஒரு வீடு சொந்தம்... இல்லாதவனுக்கு பல வீடுகள் என்பார்கள். இதனால் காவல் நிலையத்துக்கு லஞ்சம் வராவிட்டால் என்ன என்று தானே கடைகளை தேடி போய் கல்லா கட்டி வருகிறாராம். இதற்காக அவர் கொரோனா என்ற ஆயுதத்தை எடுத்துக்கொண்டார். தற்போது நல்லா கல்லா கட்டிவருகிறாராம். பட்டுக்குபெயர்போன சிறுவந்தாட்டில் தை முகூர்த்தத்தில் புடவை எடுக்க நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்துவருகிறார்களாம். கடைகளில் கொரோனா விதிமீறல் என்று கடைக்கு ஏற்றார்போல அமவுண்ட் நிர்ணயம்செய்து, வசூல்வேட்டையில் இறங்கியிருக்கிறாராம். அதுமட்டுமா.. பொங்கல் பண்டிகைக்கு தனது லிமிட்டில் புதுசா ஜெயிச்சு வந்த தலைவர், கவுன்சிலர்களிடமும் பொங்கல் வசூலை லகரக்கணக்கில் முடித்துள்ளாராம் பெண் காக்கிஅதிகாரி... அரசியல்வாதிகளிடமே கைவரிசை காட்டியுள்ள பெண் காக்கி அதிகாரியை பார்த்து அவரது சக ஊழியர்களே மூக்கில் கை வைத்துள்ளார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பூட்டு மாவட்டத்தில் இலை கட்சிக்கு பூட்டு போட வேண்டியது இருக்குமோ என்று வேட்டைக்காரர் தொகுதியை சேர்ந்தவர் ரொம்பவே பீல் பண்றாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூட்டு மாவட்டம் 7 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தூர் என முடியும் தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனதால் இலைக்கட்சியின் சிவமான மாஜி எம்எல்ஏ பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். மேலும், நதியூர் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கிய நிலையிலும், தன் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு சிபாரிசு செய்து களமிறக்கினார். அவரும் தோற்றுப்போனார். இதனால் விரக்தியில் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு சிக்கலில் சிக்கி உள்ளார். அதாவது, மாவட்டத்தில் அய்யலூர், வடமதுரை, வேடசந்தூர், குஜிலியம்பாறை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் அதிகளவில் இலைக்கட்சியினரின் மோசடி அரங்கேறி இருக்கிறதாம். குறிப்பாக சிவமானவருக்கு ஆதரவான இலைக்கட்சி நிர்வாகிகளே அதிகளவில் முறைகேடுகளை செய்துள்ளனர். தற்போது மோசடி வெளியே தெரியத் தொடங்கியதால், புலம்பித் தள்ளி வருகிறாராம்... ஏற்கனவே, மாவட்டத்தில் இலைக்கட்சி செல்வாக்கை இழந்து வரும் நிலையில், இந்த மோசடி வெளியே தெரிந்தால் சிக்கலாச்சே என பார்ப்பவர்களிடம் எல்லாம் குமுறலை வெளிப்படுத்தி வருகிறார். இவரது ஆதரவாளர்களும் அச்சத்துடனே நடமாடுகின்றனராம். இப்படியே போனால் பூட்டு மாவட்டத்தில் உள்ள பல இலை கட்சி அலுவலகங்களை பூட்டுவதை தவிர வேறு வழி இல்லை என்று தன் சக கட்சி நண்பர்களிடம் சொல்லி வருகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shortest-man-world-25

  மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

 • canata-storm-24

  வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

 • north111s

  உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்