ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டு கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
2022-01-18@ 02:14:56

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) 1974ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞரால் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது. தாட்கோவின் கட்டுமான பிரிவினால் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாய கூடங்கள் ஆகியவற்றின் கட்டுமான பணிகளும், மேம்பாட்டு பிரிவால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக உ.மதிவாணனை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17ம் தேதி) உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உ.மதிவாணன், வழக்கறிஞர் ஆவார். 1996 முதல் 2001 வரை திருவாரூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும், 2006 முதல் 2011 வரை திருவாரூர் எம்எல்ஏவாகவும், தமிழக பால்வளத் துறை அமைச்சராகவும் பணிபுரிந்த நீண்ட அனுபவம் கொண்டவர் ஆவார். மேலும், கடந்த 2016 முதல் 2021 வரை கீழ்வேளுர் எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருவாரூர் மற்றும் கீழ்வேளுர் தொகுதி மக்களுக்கு எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை ஆற்றியுள்ளார்.
Tags:
Former Minister U. Mathivanan appointed as Chairman Adithravidar Housing and Development Corporation Chief Minister MK Stalin ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழக தலைவராக முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் நியமனம் முதல்வர் மு.க.ஸ்டாலின்மேலும் செய்திகள்
திண்டிவனம் நோக்கி செல்லும் பஸ்கள் மாமண்டூர் மோட்டலில் நிற்க வேண்டும்: போக்குவரத்துத்துறை உத்தரவு
வங்கக்கடலில் காற்று சுழற்சி எதிரொலி தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
இலங்கை சிறையில் இருந்து 4 மீனவர் விடுதலை
மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைவு தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை இரு மடங்கு அதிகரிப்பு
மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை சட்ட விதிகளை மீறிய ஆளுநர் உச்ச நீதிமன்றம் கண்டனம்
பேரறிவாளனை விடுவித்தது உச்சநீதிமன்றம் இந்திய வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவுகூரத்தக்க தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!