வளாக நேர்காணல் முகாமில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 40% கூடுதலாக வேலைவாய்ப்பு பெற்றனர்
2022-01-18@ 02:11:57

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணலில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் அதிகளவு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த வளாக நேர்காணலுடன் ஒப்பிடுகையில் இது 40% கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரையில் வளாக நேர்காணலை நடத்தி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டில் வளாக நேர்காணல் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. இந்தநிலையில் நடப்பு ஆண்டிலும் ஆன்லைன் மூலம் வளாக நேர்காணலை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த வளாக நேர்காணலில் சிஸ்கோ, சாம்சங் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வெல்ஸ் பார்கோ, சொசைட் ஜெனரல், பாங்க் ஆப் நியூயார்க் மெலன், வால்மார்ட் லேப்ஸ், போர்டு, ரிலையன்ஸ், ஹூண்டாய், ஆல்ஸ்டோம், ஓலா எலக்ட்ரிக், ராப்தி எனர்ஜி, டைகர் அனலிடிக்ஸ், குளோபல் அனலிடிக்ஸ், காட்டர்பில்லர் உள்பட பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான கிண்டி இன்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகியவற்றில் படிக்கும் இளநிலை, முதுநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர். இந்த ஆண்டு வளாக நேர்காணலில் இதுவரை 142 நிறுவனங்கள் பங்கேற்று, 1,700 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இது மேலும் அதிகரித்து, 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சராசரி ஆண்டு சம்பளம் ரூ.6 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு குவிந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 40 சதவீதம் வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் 120 நிறுவனங்களில் 1,100 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
At the campus interview camp Anna University 40% of students in addition employment வளாக நேர்காணல் முகாமில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 40% கூடுதலாக வேலைவாய்ப்புமேலும் செய்திகள்
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 36 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 39 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன் அவரது குடும்பத்தினர் சந்திப்பு: முதலமைச்சர் எங்களை ரொம்ப மகிழ்ச்சியா வரவேற்றாரு; சந்திப்புக்கு பின் அற்புதம் அம்மாள் பேட்டி
முதலமைச்சர் ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு : தயார் அற்புதம்மாள் பேட்டி
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம்
பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.9 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..!!
சீனர்கள் 263 பேருக்கு சட்டவிரோதமாக இந்திய விசா வழங்கிய விவகாரம்: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்து செல்ல சிறப்பு நீதிமன்றம் அனுமதி
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!