நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்: 300 பேர் இணைந்தனர்
2022-01-18@ 02:03:44

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட நந்திவரத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் திடலில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இதில், நகர பொறுப்பாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமமூர்த்தி, பொன்தசரதன், ஜெமினிஜெகன், மதன், கயிலை அன்பு, எ.ம்.கே.டி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.பி. சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் கலந்துகொண்டு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாளை தொடங்கி வைத்தார். இதில், 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் புதிய உறுப்பினராக தங்களை சேர்த்துக்கொண்டனர். மேலும், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். முன்னாள் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் அப்துல்காதர், ரவி, மாசிலாமணி, சதீஷ்குமார், ஹரி, பிரகாஷ், ஏ.எஸ்.தரணி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பேரூர் மாணவரணி அமைப்பாளர் எம்கேபி தினேஷ்குமார் நன்றி கூறினார்.
Tags:
Nandivaram-Guduvancheri Municipality DMK Member Admission Camp 300 people joined நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் 300 பேர் இணைந்தனர்மேலும் செய்திகள்
தேவகவுடா பிறந்த நாள் முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு வெள்ளைத்துணியால் வாயை கட்டி காங்கிரசார் இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
பேரறிவாளன் விடுதலை இப்போதேனும் முடிந்ததே: கமல்ஹாசன் டிவிட்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 26ம் தேதி இ. கம்யூ. போராட்டம்: தேசிய பொது செயலாளர் டி.ராஜா அறிவிப்பு
19 வயதில் சிறைக்கு சென்று 50வது வயதில் விடுதலையானார் பேரறிவாளன்!: பேரறிவாளன் வழக்கு கடந்த வந்த பாதை
சொல்லிட்டாங்க...
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!