தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் நாளை நேர்காணல்
2022-01-18@ 01:59:34

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், திருத்தணி ஆகிய நகராட்சிகள் மற்றும் பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பேரூராட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுகவினரிடம், எனது தலைமையில் எம்எல்ஏக்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி, திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள என்.எஸ்.கே. டவரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நாளை (19ம் தேதி) நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு பள்ளிப்பட்டு பேரூராட்சி, காலை 10.30 மணிக்கு பொதட்டூர்பேட்டை பேரூராட்சி, மதியம் 12 மணிக்கு திருத்தணி நகராட்சி, மாலை 4 மணிக்கு திருவள்ளூர் நகராட்சிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி கழக செயலாளர்கள் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் முறையாக தகவல் தெரிவித்து நேர்காணலில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Tags:
To contest the election optional petition DMK interview tomorrow தேர்தலில் போட்டியிட விருப்ப மனு திமுக நாளை நேர்காணல்மேலும் செய்திகள்
தேவகவுடா பிறந்த நாள் முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு வெள்ளைத்துணியால் வாயை கட்டி காங்கிரசார் இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
பேரறிவாளன் விடுதலை இப்போதேனும் முடிந்ததே: கமல்ஹாசன் டிவிட்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 26ம் தேதி இ. கம்யூ. போராட்டம்: தேசிய பொது செயலாளர் டி.ராஜா அறிவிப்பு
19 வயதில் சிறைக்கு சென்று 50வது வயதில் விடுதலையானார் பேரறிவாளன்!: பேரறிவாளன் வழக்கு கடந்த வந்த பாதை
சொல்லிட்டாங்க...
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!