குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி நீக்கத்துக்கு டிபென்ஸ் மினிஸ்டரி காரணம்: அண்ணாமலை பேட்டி
2022-01-18@ 01:28:17

கரூர்: குடியரசு தினவிழா அணி வகுப்பில் தமிழக அரசு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு ‘‘மினிஸ்ட்ரி ஆப் டிபென்ஸ்’’ முடிவு என அண்ணாமலை தெரிவித்தார். கரூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் முக்கிய பிரச்னையாக இருப்பது குடியரசு தின விழாவில் தமிழக அரசு சார்பில் சென்றிருக்க கூடிய அணிவகுப்பு ஊர்தி ரிஜக்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறி எதிர்கட்சியை சேர்ந்த சிலர், குற்றசாட்டுக்களை வைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா அணி வகுப்பில், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் அந்த மாநிலத்தை பிரதிபலிக்க கூடிய ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்கும். இது அனைத்து ஆட்சியிலும் மினிஸ்டரி ஆப் டிபென்ஸ் (ராணுவ அமைச்சகம்) நடத்துகின்ற நிகழ்ச்சி. எந்த மாநிலத்தில் இருந்து யார் பங்கேற்பது என்பதை கூட அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.
இந்தாண்டு ஜனவரி 26ல் நடக்க கூடிய அணி வகுப்புக்காக 2021ம் ஆண்டு செப்டம்பர் 21ல் ராணுவ அமைச்சகம், ஒவ்வொரு மாநிலத்தில் இருக்க கூடிய தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி, உங்கள் மாநிலத்தில் இருந்து பங்கேற்கிறீர்களா என செப்டம்பர் 27க்குள் சொல்லுங்கள் எனவும், அதன் பின்பு இரண்டாவது அக்டோபர் நடக்கும் மீட்டிங்கில் பங்கேற்று என்ன கான்செப்ட் என்பதை சொல்லுங்கள் எனவும் கூறியுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்து, 2014ல் இருந்து 7 ஆண்டுகளில் ஐந்து முறை தமிழகத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது டிபென்ஸ் மினிஸ்டரி முடிவு செய்வது. அந்த கமிட்டி அரசை சார்ந்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Republic Day Tamil Nadu Government Vehicle Defense Ministry Annamalai Interview குடியரசு தினவிழா தமிழக அரசு ஊர்தி டிபென்ஸ் மினிஸ்டரி அண்ணாமலை பேட்டிமேலும் செய்திகள்
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!
மற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
சொல்லிட்டாங்க...
முதல்வருடன் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தனியாக சந்திப்பு: தொகுதி கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்
மெகா கூட்டம் முடிஞ்சதும் பெரிய விக்கெட் காலி வெளியேறினார் ஹர்திக்: போன் பேசுறாங்க... சிக்கன் சாண்ட்விச் சாப்பிடுறாங்க... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம்
தேவகவுடா பிறந்த நாள் முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!