சென்னையில் இருந்து ரயிலில் துணை ஜனாதிபதி விஜயவாடா பயணம்
2022-01-18@ 00:51:02

சென்னை: பொங்கல் பண்டிகையை தனது உறவினர்களுடன் கொண்டாடுவதற்காக, இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார். பண்டிகையை குடும்பத்தாருடன் கொண்டாடி விட்டு, மீண்டும் அவர் விமானம் மூலம் நேற்று விஜயவாடாவிற்கு செல்ல முடிவு செய்திருந்தார். இந்நிலையில், நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்தது. இதனால், தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வந்தது. எனவே, பாதுகாப்பு கருதி, தனது விமான பயணத்தை தவிர்த்து, ரயிலில் விஜயவாடா செல்ல முடிவு செய்தார். தொடர்ந்து வெங்கய்யா நாயுடு, சென்னை திரிசூலம் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து விஜயவாடா செல்லும் ரயிலில் ஏறி புறப்பட்டுச் சென்றார். அவரை சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
Tags:
Chennai By Train Vice President Travel to Vijayawada சென்னை ரயிலில் துணை ஜனாதிபதி விஜயவாடா பயணம்மேலும் செய்திகள்
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரிய விலங்குகள் பறிமுதல்; பயணியிடம் விசாரணை
சென்னை ஐஐடி - உடன் காத்மாண்டு பல்கலைக்கழகம் 2 ஒப்பந்தங்கள் உட்பட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேபாளம், இந்தியா இடையே கையெழுத்தானது!!!
படியில் பயணம் செய்ததை தட்டிக்கேட்டதால் மாணவர்கள் ஆவேசம்: அரசுப்பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் சாலைமறியல்
'தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்' : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
வதந்தியை நம்பாதீர்!: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை..அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!!
தமிழகத்தில் தென்காசி, திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!