SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாதனை அரசு

2022-01-18@ 00:32:37

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் புது விதமான வளர்ச்சியை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு அறிவிக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனி வளர்ச்சியில் நாட்டிற்கு தமிழகம் தான் வழிகாட்டியாக திகழும். அந்த அளவுக்கு மிக சிறப்பு வாய்ந்த திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். உலகம் முழுவதும் நான்காம் தொழிற்புரட்சி தொடங்கி விட்டது. அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

தமிழகத்தில் கம்ப்யூட்டர் புரட்சியையே கலைஞர் தான் உருவாக்கினார். அடுத்த தலைமுறையினருக்கும் பயன்படும் வகையில் மிக சிறப்பாக செயல்படுவது தான் திமுக தலைமையிலான அரசு. புதிய கண்டுபிடிப்பு, அறிவியலில் புதுமை உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலகமே தமிழகத்தை உற்று கவனிக்க வேண்டிய காலம் வரும். அந்த அளவுக்கு வலுவான கட்டமைப்புகளை முதல்வர் ஏற்படுத்தி வருகிறார்.

சர்வதேச அளவில் அனைத்து துறைகளிலும் தமிழர்கள் சாதிக்க முடியும். அறிவுக்கூர்மையான தமிழக இளைஞர்கள், இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முத்திரை பதிக்க முடியும். எனவே திறமைகளை வெளிப்படுத்தி, சர்வதேச அளவில் சாதிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். மனித ஆரோக்கியம், வலுவான தொழில்வளம், தரமான கல்வி, பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறது. வெள்ளத்தில் நடந்து சென்று மக்களை நேரில் சந்தித்தது, மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை செயல்படுத்துவது, வளர்ச்சியில் தமிழகம் தன்னிறைவு பெற புதுப்புது திட்டங்களை செயல்படுத்துவது, அறிவித்த திட்டங்களில் இலக்குகளை அடைவது, மக்கள் மீது அக்கறையோடு இருப்பது உள்ளிட்ட மக்களின் நலன் சார்ந்த விஷயங்களை நுணுக்கமாகவும், சிறப்பாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

முக்கியமாக, தொழில்வளம், நீர்மேலாண்மை திட்டம், வேளாண் திட்டம், ஆரோக்கியம் சார்ந்த திட்டம், சுகாதார குறியீட்டில் முன்னேற்றம், பேரிடரை எதிர்கொள்ள வியூகங்கள் வகுப்பது, கல்வியில் புதுமை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மிக நேர்த்தியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொழில் வளங்களுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் சுற்றுப்புற சூழலுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற திட்டங்களை யாரும் அறிமுகப்படுத்தியது இல்லை. இதனாலேயே உலக அளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் எடுத்து வருகிறார். பொதுமக்களின் ஆதரவோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் வெகு விரைவில் நூறு சதவீத இலக்குகளை எட்டி வரலாற்று சாதனை படைக்கும்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்