பட்டியல் சாதியினரின் வீட்டில் இரட்டை மனதுடனேயே முதல்வர் யோகி ஆதித்யநாத் கிச்சடி சாப்பிட்டார் : அகிலேஷ் யாதவ் தாக்கு
2022-01-17@ 11:42:18

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால் 3 மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார். லக்னோவில் பேட்டி அளித்த அவர், பாஜகவையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் கடுமையாக சாடியுள்ளார். அயோத்தியில் போட்டியிட கனவு கண்டு கொண்டு இருந்த யோகிக்கு கோரக்பூரில் சீட் வழங்கி இருப்பதன் மூலம் அவருக்கு பாஜக பிரிவு உபசார விழா நடத்தி முடித்து இருப்பதாக மீண்டும் நயாண்டி செய்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 80%க்கும் 20%க்கும் தான் மோதல் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.
இதனை குறிப்பிட்டு பேசிய அகிலேஷ், உத்தரப் பிரதேசத்தில் பிரித்தாளும் வெறுப்பு அரசியலை பாஜக செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.பட்டியல் சாதியினர் தனது அருகில் வரும் போது, சோப், ஷாம்பூ போட்டு குளித்துவிட்டு வர வேண்டும் என்று யோகி கூறி இருந்ததை சுட்டிக் காட்டிய அகிலேஷ், பட்டியல் சாதியினரின் வீட்டில் இரட்டை மனதுடனேயே யோகி கிச்சடி சாப்பிட்டார் என்று விமர்சித்துள்ளார். பட்டியல் சாதிக்காரர் வீட்டில் சோப்பும் ஷாம்பூம் இருந்திருந்தால் யோகி சந்தோஷப்பட்டு இருப்பார் என்று அவர் விமர்சித்துள்ளார்.சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.
மேலும் செய்திகள்
இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
பேரறிவாளன் விடுதலை காங்கிரஸ் கண்டனம்
நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் திமுக எம்பி.க்கள் மனு
நடிகை தற்கொலை
கல்யாணம் பண்ணி வைங்க...அமைச்சர் ரோஜாவிடம் 65 வயது முதியவர் அடம்
டெல்லி ஆளுநர் ராஜினாமா
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!