டோங்கா எரிமலை சுனாமி பீதி நீங்கியது
2022-01-17@ 02:45:01

வெலிங்டன் : பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குட்டி நாடு டொங்கா. இங்கு கடலுக்கு அடியில் உள்ள பிரமாண்ட எரிமலையான ‘ஹங்கா டோங்கா ஹங்கா ஹய்பை’ கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா வரையில் இந்த சத்தம் கேட்டது.
இந்த எரிமலை வெடித்தது 5.8 ரிக்டேர் புள்ளி அளவிலான பூகம்பத்துக்கு சமமாக இருந்தது. இதனால், கடலில் 5 கிமீ சுற்றளவுக்கு சாம்பல் வெளியானது. வானத்தில் 20 கிமீ உயரத்துக்கு சாம்பல் மண்டலம் பிரமாண்டமாக பறந்தது. எரிமலை வெடித்ததால் கடலில் சுனாமி அலைகள் ஏற்பட்டன. டோங்கா, நியூசிலாந்து, அமெரிக்காவின் அலாஸ்கா, ஹவாய், இதன் பசிபிக் பெருங்கடல் பகுதிகள், மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால், மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி பெரியளவில் சுனாமி ஏற்படவில்லை. அலாஸ்காவில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் ஊருக்குள் நுழைந்தன. இந்த சுனாமி அபாயம் நேற்று நீங்கியது. இருப்பினும், இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கடற்கரையை ஒட்டி வசித்து வரும் டோங்காவின் 6ம் மன்னர் டுபோவை, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் உயரமான மலைப்பகுதிக்கு ராணுவம் அழைத்து சென்றது.
* ஹங்கா எரிமலையில் இருந்து கிளம்பும் சாம்பல் படர்ந்து டோங்கா தீவின் நிலப்பரப்பு 45 சதவீதம் பெரிதாகி இருக்கிறது.
* டொங்கா தலைநகர் நுகுஅலோபாவில் இருந்து வடக்கே 65 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஹங்கா எரிமலை, கடல் மட்டத்தில் இருந்து 100 மீ உயரமாக அமைந்துள்ளது. ஆனால், கடலுக்கு அடியில் இது 20 கிமீ அகலமும், 1.8 கிமீ உயரமும் பரந்து, விரிந்து பிரமாண்டமாக உள்ளது.
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலியா தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி: பிரதமர் பதவியை இழக்கிறார் மோரிசன்
உக்ரைன் - லடாக்கில் என்ன நடக்கிறது? : லண்டன் மாநாட்டில் ராகுல் குற்றச்சாட்டு
சிகாகோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு... 8 பேர் படுகாயம்!!
இலங்கையை கொடிய உணவு பஞ்சம் தாக்குவது உறுதி... மக்கள் சிறு தானியங்களை உடனே பயிரிட வேண்டும் : பிரதமர் ரணில் உத்தரவு!!
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.61 கோடி ஆக உயர்வு!!
பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லை: திவாலாகிறது இலங்கை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்