பாக். பெண் தீவிரவாதியை விடுவிக்கக் கோரி 4 பேரை பிணைக் கைதியாக பிடித்த நபர் சுட்டுக்கொலை
2022-01-17@ 02:36:19

*அமெரிக்காவில் போலீஸ் அதிரடி
வாஷிங்டன் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூதர்கள் வழிபாட்டு தலத்தில் நேற்று முன்தினம் பிரார்த்தனை நடந்து கொண்டு இருந்தது. அப்போது, திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த நான்கு பேரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்தான். தகவல் அறிந்த போலீசார், வழிபாட்டு தலத்தை சுற்றி வளைத்தனர். பிணைக்கைதிகளை பிடித்த மர்ம நபர், பாகிஸ்தானைச் சேர்ந்த நரம்பியல் பெண் விஞ்ஞானியான ஆபியா சித்திக்கை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான்.
பாகிஸ்தானை சேர்ந்த இவர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நான்கு பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்த நிலையில் ஆறு மணி நேரத்துக்கு பின் ஒருவர் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பின் மர்ம நபரைப் போலீசார் சுட்டுக் கொன்று மீதமுள்ள மூன்று பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
மேலும் செய்திகள்
லும்பினியில் பிரதமர் மோடி பேச்சு நேபாளத்துடனான உறவு வலுவானது
இம்ரானை கைது செய்தால் பாகிஸ்தான் இலங்கையாக மாறும்..! மாஜி அமைச்சர் ஷேக் ரஷித் அகமது பரபரப்பு பேட்டி
கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள வடகொரியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: உலக சுகாதார அமைப்பு தகவல்
இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது: பிரதமர் ரணில் பேச்சு
போனில் ஆர்டர் செய்தால் போதும்...! டேபிள் தேடிவந்து உணவு பரிமாறும் ‘ரோபோ’..! வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு
நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு ஆதரவு அளிக்கிறேன்: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவிப்பு..!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!