ஏப்.1ல் சிரஞ்சீவி படம் ரிலீஸ்
2022-01-17@ 02:21:11

சென்னை : இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் சினிமா தியேட்டர்கள் இயங்குவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பல மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்களின் படங்கள் குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வருவதில் பலத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் மற்றும் காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே நடித்துள்ள படம், ‘ஆச்சார்யா’. மணிசர்மா இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 4ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஏப்ரல் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு புத்தாண்டான யுகாதி பண்டிகைக்கு இப்படம் வெளியாகிறது.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா: மதுபிரியர்கள் குதூகலம்..!!
நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை முடக்கியது ஒன்றிய அரசு..!!
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவுடன் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்
மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவது கொடுமை: கேரள உயர் நீதிமன்றம் கருத்து
கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம்...
கல்வி, கலாச்சாரப் பயணமாக புதுவை வந்துள்ள துருக்கி மாணவர்கள்!: சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி..!!
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...