திருப்பூர் பனியன் நிறுவனங்களில் இன்று முதல் 2 நாள் உற்பத்தி நிறுத்தம்
2022-01-17@ 01:35:25

திருப்பூர் : நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் பனியன் நிறுவனங்களில் இன்று முதல் 2 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடக்கிறது.பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளான நூல் விலையை பொறுத்தே ஆடைகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் ஆடை தயாரிப்பாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக நூல் விலை எதிர்பாராத அளவிற்கு உயர்ந்து வருவதால், தொழில்துறையினர் பலரும் ஆர்டர்களை முடிக்க முடியாமலும், புதிய ஆர்டர்களுக்கு ஒப்பந்தம் செய்ய முடியாமலும் தவித்து வருகிறார்கள்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நூல் விலை கிலோவுக்கு ₹50 வரை உயர்ந்தது. கடந்த மாதம் கிலோவுக்கு ₹30 வரை நூல் விலை உயர்ந்தது. இந்த நூல் விலை உயர்வை கண்டித்து இன்று (17ம் தேதி) மற்றும் நாளை (18ம் தேதி) திருப்பூர் பனியன் நிறுவனங்களில் உற்பத்தியை நிறுத்தி தொழில்துறையினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் தெரிவித்தார்.
இதற்கு சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்) உள்பட பல சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்றும், நாளையும் நடக்கும் 2 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடர்பாக சுவரொட்டிகளும் மாநகர பகுதிகளில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள்
விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணனுக்கு கொரோனா
கர்நாடகாவில் கொட்டித்தீர்த்த கனமழை காவிரியில் 30,000கனஅடி நீர்வரத்து: மேட்டூர் அணை 10 நாளில் நிரம்ப வாய்ப்பு
நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
சங்கரா பல்கலையில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா
தமிழக முதல்வர், மனைவி உருவத்தில் பட்டுசேலை: நெசவாளர் தம்பதி சாதனை
ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!