நிதித்துறை யோசனையை தொடர்ந்து ஏரிகளை தூர்வாருவதன் மூலம் கிடைக்கும் மணல் விற்பனை : நீர்வளத்துறை நடவடிக்கை
2022-01-17@ 00:32:14

சென்னை : ஏரிகளை தூர்வாரி அதன் மூலம் கிடைக்கும் மணலை விற்பனை செய்து வருவாய் ஈட்ட நிதித்துறை யோசனை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 14,098 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் பெரும்பாலான ஏரிகள் தூர் வாரப்படாமல் உள்ளது. இதனால் பருவமழை காலங்களில் மூலம் கிடைக்கும் மழைநீரை முழுமையாக சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 40 சதவீதம் கொள்ளளவு மண் படிமங்களால் காணப்படுகிறது. எனவே, இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் ஏரிகளின் கொள்ளளவை பழைய நிலைக்கு கொண்டுவர நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக தமிழக அரசின் சார்பில் நிதி ஒதுக்க முன்வந்துள்ளது. மேலும், இந்த ஏரிகளில் தூர்வாருவதன் மூலம் கிடைக்கும் மணலை விற்பனை செய்து அதன்மூலம் வருவாய் ஈட்டவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சென்னையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளை தூர்வாருவதன் மூலம் கிடைக்கும் மணலை நீர்வளத்துறை சார்பில் விற்பனை செய்து வருவாய் ஈட்டி வந்தது.
இதேபோன்று அனைத்து ஏரிகளையும் தூர்வாரி அதன்மூலம் கிடைக்கும் மணலை விற்பனை செய்து வருவாய் ஈட்ட நிதித்துறை சார்பில் நீர் வளத்துறைக்கு யோசனை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 1,474 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட காவேரிப்பாக்கம் ஏரியை ₹50 கோடி செலவில் தூர்வாரப்படுகிறது. அவ்வாறு தூர்வாருவதன் மூலம் கிடைக்கும் மணலை விற்பனை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும் நிதித்துறை சார்பில் நீர்வளத் துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதி கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!