தமிழகத்தில் 23,975 பேருக்கு கொரோனா : சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழிப்பு
2022-01-17@ 00:22:21

சென்னை : தமிழகத்தில் நேற்று 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நேற்று இரண்டாவது வாரமாக கடைப்பிடிக்கப்பட்டது.
எனினும் கொரோனா தொற்றின் வேகம் குறைந்தபாடில்லை. அதன்படி நேற்று 23,975 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1,40,720 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 23,975 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவிற்கு 1,42,476 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 12,484 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 27,60,458 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 22 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 11 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 11 பேரும் உயிரிழந்தனர். அதன்படி இதுவரை 36,989 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் அதிகபட்சமாக நேற்று சென்னையில் 8,987 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று 241 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஊட்டி மலைப்பாதையில் வாகனங்களை மறித்த காட்டு யானை
நளினிக்கு 5வது முறையாக பரோல் நீட்டிப்பு
கண் பரிசோதனை முகாமில் பாஜ நிர்வாகி பங்கேற்பு மதுரை விரைவு போக்குவரத்து கழக மேலாளர் சஸ்பெண்ட்
ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் செம்பு பாத்திரத்தில் கிடைத்த புதையல்: ஒப்படைக்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
தமிழ்நாட்டில் 10 மாதங்களில் அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சேலத்தில் தீவிர விசாரணை
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!