SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை; திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைப்பு.! தமிழக அரசு அறிவிப்பு

2022-01-16@ 14:48:12

சென்னை: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 19ம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து முன்னதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால்,10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்தது. இதற்கிடையில்,கொரோனா அதிகரித்து வருவதால் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்து,ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் , தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்