கொரோனா தொடர்பான நெறிமுறைகளை பின்பற்றி தொற்றுநோயில் இருந்து விரைவில் கடந்து செல்வோம்; பிரதமர் மோடி ட்விட்
2022-01-16@ 13:45:59

டெல்லி: கொரோனா தடுப்பூசி பணிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. புனே சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிதான் ஒரே ஆயுதம் என்பதால், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதுவரை 156.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பூசி பணிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகள். அரசின் தடுப்பூசி திட்டம் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது. இது உயிர்களைக் காப்பாற்றவும், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வழிவகுத்துள்ளது. தடுப்பூசிகள் மூலம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நமது தேசம் பங்களிக்க முடிந்ததைக் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. அதே நேரத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பங்கு விதிவிலக்கானது.
தொலைதூரப் பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் நபர்களின் காட்சிகளைப் பார்க்கும்போது பெருமிதம் கொள்கின்றன. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் அறிவியல் அடிப்படையிலானதாகவே இருக்கும். நாட்டு மக்கள் சரியான அறிவுறுத்தல்களை பெறுவதை உறுதி செய்வதற்காக சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறோம். கொரோனா தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்றி, தொற்றுநோயில் இருந்து விரைவில் கடந்து செல்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்
பான் இந்தியா ஸ்டாராக ஜூனியர் என்டிஆர் தேர்வு
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை மனைவி, மகளை அறையில் அடைத்து கதவில் சுவர் எழுப்பிய கணவன்: ஐதராபாத்தில் பரபரப்பு
அருணாச்சல் எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது சீனா: ராணுவ தளபதி தகவல்
பீகாரில் விரைவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: நிதிஷ் அறிவிப்பு
வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!