திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவை
2022-01-16@ 04:21:18

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை பாடப்படும். தொடர்ந்து, நித்திய கைங்கரியங்களான தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் தேவஸ்தானத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்துக்கு பதிலாக ஆண்டாள் எழுதிப்பாடிய, ‘திருப்பாவை பாசுரங்கள்’ தமிழில் பாடப்பட்டு நித்ய பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி மார்கழி (தனுர்) தொடங்கியது. இதனால், டிசம்பர் 17ம் தேதி முதல் ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை நிறுத்தப்பட்டு, ‘திருப்பாவை பாசுரங்கள்’ பாடப்பட்டு வந்தது. பின்னர், மார்கழி மாதம் நிறைவு பெற்று தை மாதம் பிறந்ததை தொடர்ந்து ஏழுமலையான் கோயிலில் நேற்று முதல் மீண்டும் சுப்ரபாத சேவையுடன் வழிபாடுகள் தொடங்கியது. பொங்கல் பண்டிகை நாளான நேற்று முன்தினம் உண்டியலில் ₹2.13 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.
மேலும் செய்திகள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்
பான் இந்தியா ஸ்டாராக ஜூனியர் என்டிஆர் தேர்வு
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை மனைவி, மகளை அறையில் அடைத்து கதவில் சுவர் எழுப்பிய கணவன்: ஐதராபாத்தில் பரபரப்பு
அருணாச்சல் எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது சீனா: ராணுவ தளபதி தகவல்
பீகாரில் விரைவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: நிதிஷ் அறிவிப்பு
வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!