அரசின் விதிமுறையை மீறிய விஜிபி பொழுதுபோக்கு பூங்காவுக்கு சீல்: ரூ.15 ஆயிரம் அபராதம்
2022-01-15@ 17:02:26

துரைப்பாக்கம்: அரசின் அனுமதியில்லாமல் இயங்கிய விஜிபி பொழுதுபோக்கு பூங்காவுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அரசின் உத்தரவை மீறியதால் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் தொற்றும் பொதுமக்களை மிரட்டி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் சுற்றுலா தலங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவுக்கு சொந்தமான மீன் அருங்காட்சியகம், கொரோனா தளர்வுகளை மீறி திறந்து மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சோழிங்கநல்லூர் மண்டல அதிகாரிகள், நீலாங்கரை போலீசார், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். தமிழக அரசின் உத்தரவை மீறி மீன் அருங்காட்சியம் திறக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, மீன் அருங்காட்சியகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அரசின் உத்தரவை மீறியதால் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழு செய்த ஆய்வு நிறைவு: இன்று அல்லது நாளை அறிக்கை தாக்கல்..!
உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் வெண்கலை சிலை; கிராம சபையில் தீர்மானம்
குடிபோதை தகராறில் விபரீதம்; மாமாவை கம்பியால் அடித்து கொன்ற மைத்துனர் கைது
கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம், மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பலி; குடும்பத்தினர் 5 பேர் படுகாயம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!