SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோலாகல வழிபாடு

2022-01-15@ 16:48:05

சேலம்: சேலத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு விவசாயிகள் சிறப்பு பூஜை நடத்தினர். செட்டிச்சாவடி பகுதியில் அதிகாலையிலேயே 10- க்கும் மேற்பட்ட மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து விவசாய நிலங்களில் கட்டிவைத்து விவசாயிகள் மாட்டுப்பொங்கலை விமரிசையாக கொண்டாடினர். பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் ஆடு, மாடுகளுக்கு பொங்கல் ஊட்டி மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டத்தில் தமிழர் பாரம்பரியங்களில் ஒன்றான சிறு வீட்டு பொங்கலிடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

சிறுவீட்டு பொங்கல் நிகழ்ச்சி தென்மாவட்டங்களில் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டும் வருகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை முதலே மீனாட்சிபுரம் பகுதியில் வீட்டின் முன்பு மண்ணால் ஆனா சிறுவீடு கட்டி பெண்கள் பால் காய்ச்சினர். அப்பொழுது சிறுபிள்ளைகள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து குலவையிட்டு மகிழ்ந்தனர். அத்துடன் தாமிரபரணி நதிக்கரைக்குச் சென்று வழிபாடு நடத்தினர்.

அரசிராமணி செட்டிபட்டி கிராமப்புற பகுதி விவசாயிகள் அதிகாலையிலேயே மாடுகளை குளிப்பாட்டி, வர்ணங்கள் பூசி புதுபானையில் பொங்கல் வைத்து மாடுகளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர். மாடுகளுக்கு பொங்கல் ஊட்டி, மாட்டுப்பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.     

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாட்டுப்பொங்கலை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடினர். நாகர்கோவில் சுற்று வட்டார கிராமங்களில் மாடுகளுக்கு மாலை அணிவித்து தலைப்பாகை கட்டி மண்பானையில் பொங்கலிட்டு வணங்கினர். தொடர்ந்து பொங்கல் உள்ளிட்ட உணவுகளை மாடுகளுக்கு ஊட்டி விவசாயிகள் குலவையிட்டு மகிழ்ந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சீனிவாசபுரத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அலங்கரிக்கப்பட்டன. புதுப்பானையில் பொங்கலிட்டு மாடுகளுக்கு பிடித்த உணவுகளான பழங்கள், பருத்தி, புண்ணாக்கு உள்ளிட்டவற்றை வழங்கி மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

  • ruto-wins-presidency

    கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்