திருமண உதவி திட்டங்களின் கீழ் 94,700 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2022-01-14@ 17:06:35

சென்னை: திருமண உதவி திட்டங்களின் கீழ் 94,700 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் செயல்படுத்தப்படும் திருமண உதவி திட்டம் என்பது பெண்களின் உயர் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையிலும், பெண்களின் திருமணத்திற்காக பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயம் அளிக்கும் வகையிலும், ஏழை பெற்றோரின் மகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர், ஏழை விதவையரின் மகள், கலப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் ஆகியோர் பயன்பெறும் வகையிலும் செயல்படுத்தப்படும் தலையாய திட்டமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் 2021-22ம் நிதியாண்டிற்கு ரூ.762 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டம், பட்டயப் படிப்பு படித்த 53,599 பயனாளிகள், பட்டதாரியல்லாத 41,101 பயனாளிகள் என மொத்தம் 94,700 பயனாளிகள் பயனடைய உள்ளனர்.முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், சென்னை மாவட்டத்தை சார்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி தொகையுடன் 8 கிராம் தங்க நாணயத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமை செயலாளர் இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூகநல இயக்குநர் ரத்னா மற்றும் அரசு உயர் அதிகாாிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்: 40 லட்சம் வாடகை பாக்கி
கலைஞரின் மனச்சாட்சியாக அறியப்படும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு திமுக அமைச்சர்கள் மரியாதை..!!
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
கோளம்பாக்கம் அடுத்த படூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
போலி பல்கலை மூலம் ரூ.15 ஆயிரத்திற்கு டாக்டர் பட்டம் விற்பனை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!