புயலை கிளப்புகிறது மனைவிகள் கைமாற்றும் விவகாரம்; நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கி வீடியோ எடுத்த கணவன்: போலீஸ் விசாரணையில் அம்பலம்
2022-01-14@ 11:18:41

திருவனந்தபுரம்: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கி உல்லாச காட்சியை கணவரே வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கேரளாவை உலுக்கி எடுத்து உள்ள மனைவிகளை கைமாற்றும் சம்பவத்தில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேரளா முழுவதும் இது தொடர்பாக 24 குழுக்கள் செயல்பட்டு வருவது ஏற்கனவே போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
கோட்டயம் அருகே கருகச்சால் பகுதியை சேர்ந்த 26 வயதான இளம்பெண் அளித்த புகாரை தொடர்ந்து தான் இந்த திடுக்கிடும் தகவல் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. அவர் அளித்த புகாரின் பேரில் தான் இந்த இளம்பெண்ணின் கணவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் ‘தன்னுடைய நண்பரின் வீட்டில் ஒரு குடும்ப விழா நடைபெறுகிறது என்று கூறி முதலில் மனைவியை அவர் அழைத்து சென்று உள்ளார். வீட்டுக்கு வந்த பிறகு தான் குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றது எதற்காக என்பது குறித்து மனைவியிடம் அவர் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம் பெண் பின்னர் செல்ல மறுத்து விட்டார்.
குழந்தைகளை கொன்று விடுவேன் என்று மிரட்டி அவர் தன்னுடைய மனைவியை பணிய வைத்து உள்ளார். அதன் பிறகு தனது மனைவி வேறு ஆண்களுடன் உல்லாசமாக இருப்பதை கணவரே ரகசியமாக வீடியோ எடுத்து உள்ளார். தொடர்ந்து வீடியோவை காண்பித்து மிரட்டி கடந்த 2 வருடமாக மனைவியை பலருக்கும் விருந்தாக்கி வந்துள்ளார். நாளுக்கு நாள் கணவனின் கொடுமை அதிகமானதால் தான் வேறு வழியின்றி இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த கும்பலில் தெரியாமல் சிக்கிய 100க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மானம் போய்விடுமே என்று கருதி புகார் கொடுக்க மறுக்கின்றனர் என்று போலீசார் கூறுகின்றனர். ஆனாலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கோட்டயம் போலீசார் கூறி உள்ளனர்.
மேலும் செய்திகள்
ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது: அடைக்கலம் அளித்த போலீஸ்காரர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு
திருவல்லிக்கேணி விக்டோரியா மருத்துவமனை அருகே பிரபல ரவுடிகளின் தாய்மாமன் ஓடஓட வெட்டி கொலை: 6 பேர் கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேரிடம் ரூ.6 ஆயிரம் கோடி வசூலித்து மோசடி வேலூர் ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவன முக்கிய ஏஜென்ட்கள் 2 பேர் கைது: உரிமையாளர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
வீட்டிற்கு விளையாட வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சினிமா சிரிப்பு நடிகர் ஏபி.ராஜூ போக்சோ சட்டத்தில் கைது: விருகம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை
தனியார் நகைக்கடன் வங்கியில் கொள்ளை அடிக்க ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து 10 முறை பார்த்தேன்: போலீசில் முக்கிய குற்றவாளி முருகன் பரபரப்பு வாக்குமூலம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!