SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோஷ்டி பூசலால் 2 துண்டாகி கிடக்கும் தாமரைையை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2022-01-14@ 08:40:11

‘‘நிழலானவர் கொடுக்கிற தைரியத்தில் நிற்கிறாராமே ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  
 ‘‘மாங்கனி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக இலைகட்சிக்காரங்க இருக்காங்க. 3 வருஷத்துக்கு முன்னாடி நடந்த எலக்‌ஷன் முடிவில் மொத்தமுள்ள 14 வார்டுகளில் சூரியக்கட்சி 6, இலைகட்சி 5, முரசு கட்சி 2, மாம்பழ கட்சி 1 என்று வார்டுகளை பிடிச்சாங்க. அப்போது மாஜி விவிஐபியின் நிழலாக வலம் வந்தவரின் அதிகார தலையீட்டால் பல்வேறு தகிடு தத்தங்களை செய்து இலைகட்சிக்காரங்க தலைவர் பதவியை பிடிச்சாங்க. ஆனால் தலைவரு எந்த வேலையையும் செய்யலையாம். இதனால் இலைகட்சிக்காரங்களே கடும் அதிருப்தியில் இருந்தாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும்னு உறுப்பினர்கள் எல்லாம் முடிவு செஞ்சிருக்காங்க. இலைகட்சி உறுப்பினர்கள் 2 பேர் கூட, இதுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க. இதன்படி 11 உறுப்பினர்கள்,  சிட்டிங் தலைவர் மேலே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வச்சிருக்காங்க. இதையடுத்து விளக்கம் கேட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க. ஆனால் மூன்றே உறுப்பினர்களின் ஆதரவை வைத்திருக்கும் தலைவர் நோட்டீசை வாங்க மறுத்துட்டாராம். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். தலைவர் பதவியை விட்டுரக்கூடாது என்று நிழலானவர் கொடுத்த தைரியம் தான், இதுக்கு காரணமாம். அது சரி...சீப்பை ஒளிச்சு வச்சுட்டா கல்யாணம் நின்னு போகுமா என்று கேட்குறாங்களாம் எதிரணி உறுப்பினர்கள்’’ என்றார் விக்கியானந்தா.
 
 ‘‘குண்டாஸ்ல கைதானவருக்கு பர்த்ேட போஸ்டர் அடிச்சாங்களாமே..’’
 ‘‘வெயிலூரு  மாநகருல, கடந்த 2018ம் ஆண்டு மாநகரத்தோடு மையப்பகுதியில இருக்குற ஒரு  சர்ச்சுல, தேனிசை தென்றல் பட்டம் கொண்ட பாடகரோட பெயரை ெகாண்டவரு  துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக வெயிலூர் நார்த் போலீசார் கேஸ் போட்டு  கைது செஞ்சாங்க. அதோட, அவர் ேமல பல்வேறு வழக்குகள் நிலுவையில இருக்குறதால,  கலெக்டரு, எஸ்பியோட உத்தரவுல குண்டர் சட்டத்துலயும் கைது செஞ்சாங்க.  இதற்கிடையில, கடந்த சில நாளைக்கு முன்னாடி அவருக்கு பர்த்ேட வந்திருக்குது. இதுக்காக, குண்டாஸ்ல கைதானவருக்கு, வெயிலூர் மாநகர்ல முக்கிய சாலை,  சந்திப்புகள்னு, பல இடங்கள்ல வீர வசனங்களுடன், பர்த்டே வாழ்த்து சொல்லி,  போஸ்டர் ஒட்டப்பட்டிருந்துச்சு. பர்த்டே பார்டிக்கு, வெயிலூர்ல இருக்குற  ரவுடிகள் பலர் கலந்துக்கிட்டாங்களாம். இந்த போஸ்டர் ஒட்டிய மேட்டர்ல  போலீசார் 2 பேரை பிடிச்சு கேஸ் போட்டிருக்காங்க. குண்டாசுல கைதான  ஒருத்தருக்கு போஸ்டர்கள் ஒட்டியிருந்த சம்பவம் வெயிலூர் மாநகர்ல பரபரப்பாக  ேபசப்படுது’’ என்றார் விக்கியானந்தா.
 
 ‘‘சூப்பிரண்டு கோடிகளை குவிக்கிறதா புகார் வருதாமே..’’
 ‘‘கோவை  மாநகரில், தெற்கு, வடக்கு, சென்ட்ரல், மேற்கு என நான்கு வட்டார  போக்குவரத்து அலுவலர் அலுவலகம் உள்ளது. இந்த ஒவ்வொரு அலுவலகத்திலும்  ஆர்டிஓவுக்கு அடுத்த நிலையில், சூப்பிரண்டு உள்ளார். இவர்தான், அனைத்து  ஆவணங்களையும் சரிபார்த்து, ஆர்டிஓ டேபிளுக்கு அனுப்பி வைக்கிறார்.  உதாரணமாக, புதிய வாகன பதிவு, எல்எல்ஆர், லைசென்ஸ், பெர்மிட், லைசென்ஸ்  புதுப்பிப்பு, வாகன பதிவு புதுப்பிப்பு, பெயர் மாற்றம், வழக்கில் சிக்கிய  வாகனங்களை விடுவித்தல் போன்ற பல்வேறு ஆவணங்கள் இவரது டேபிளுக்குத்தான்  வருகிறது. இவை, அனைத்தையும் சரிபார்த்து, எல்லாம் முறையாக இருக்கிறதா என  ஆய்வு செய்து, கடைசியாக ஆர்டிஓ டேபிளுக்கு அந்தந்த சூப்பிரண்டுகள் அனுப்பி  வைக்கின்றனர். இதில், கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  உள்ள சூப்பிரண்டு, தில்லாலங்கடி வேலைகளில் அதிகளவில் ஈடுபடுகிறார். இவரது  டேபிளுக்கு வரும் பைல்களை அவ்வளவு எளிதில் நகர்த்திவிட முடியாது. கரன்சி  நோட்டுகளை உள்ளே சொருகினால்தான் ஒவ்வொரு பைல்களும் நகர்கிறது. ஒவ்வொரு  பைல்களுக்கும் குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை  கறந்துவிடுகிறார். அத்துடன், மேலதிகாரிக்கு கொடுக்கவேண்டும் என தனியாக  கறந்துவிடுகிறார். சமீபத்தில் ஒரு வழக்கில் சிக்கிய வாகனம் ஓன்றை  விடுவிக்க, கேரளாவை சேர்ந்த நபரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார்.  அதுவும், ஆர்டிஓவுக்கு கொடுக்க வேண்டும் என கேட்டு வாங்கியுள்ளார். அந்த  நபர், நேரடியாக ஆர்டிஓவிடம் சென்று, ‘’அதான் காசு கொடுத்துட்டேனே... பிறகு  ஏன் தாமதம், வண்டிய விடுவிங்க சார்...’’ என வீர வசனம் பேசியுள்ளார்.  இதைக்கேட்டு, ஆர்டிஓ அதிர்ந்து போய்விட்டாராம்’’ என்றார் விக்கியானந்தா.
 
 ‘‘கோஷ்டி பூசலால் ரெண்டு துண்டாகி கிடக்குதாமே தாமரை’’ என்றார் பீட்டர் மாமா
 ‘‘பருத்தி   சீமை மாவட்டத்தில் தாமரை கட்சியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு   தான் நிர்வாகிகள் தற்போது உள்ளார்களாம்... அதிலும், ரெண்டு துண்டாகி   கிடப்பதால் தொண்டர்கள், நிர்வாகிகளுக்குள் முனுமுனுத்து வருகிறார்களாம்...   தாமரை கட்சியின் மாவட்ட தலைவராக ராஜானவர் இருந்து வருகிறாராம்... மாநில   நிர்வாகிகளின் தயவின்றி ராஜானவர் தம்பட்டம் அடித்து வருகிறராம்.... மாவட்ட   தலைவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான சீனியர் நிர்வாகிகள் கலந்து   கொள்வது கிடையாதாம்... அந்தளவுக்கு தாமரைக்குள் கோஷ்டி பூசல் இருப்பதாக   தற்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளதாம்... விரைவில் நகர்ப்புற   உள்ளாட்சி தேர்தல் நடை பெற உள்ள நேரத்தில் தேர்தலில் யாரை நிறுத்த போறாங்க   என்ற பேச்சு நிர்வாகிகள் மத்தியில் இருந்து வருகிறதாம்.... சொந்த   கட்சிக்குள் கோஷ்டி பூசல், உள்ளாட்சி தேர்தலில் யாரை நிறுத்துவது என   உள்ளிட்ட விவகாரம் மேலிட தலைமைக்கு சென்றதால் மாநில தலைவருக்கு புதிய   தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம்.. இதனால் பருத்தி சீமை மாவட்டத்தில்   தாமரையில் அதிரடி மாற்றம் இருக்க கூடும் என கட்சிக்குள்ளே   பேசிக்கிறாங்களாம்’’ என்றார்
விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்