SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்கள் தயாரில்லை...

2022-01-13@ 00:00:48

உலகையே அச்சுறுத்தும் கொரோனா மீண்டுமொரு முறை வேகமாக பரவி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 30 கோடிக்கும் அதிகமானோர் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 3.59 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மிக  அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் இம்மாநிலங்களில் பாதிப்பு உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். டெல்லியில் பரவல் உச்சநிலையை அடையும்போது நாள் ஒன்றுக்கு பாதிப்பு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இருக்கும். மும்பையை பொருத்தவரை ஒருநாள்  பாதிப்பு அதிகபட்சமாக 30 ஆயிரம் வரை இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளி கடைபிடிக்காதது போன்ற விதிமீறல்களே நோயின் தாக்கம் அதிகரித்ததற்கு காரணம். கொரோனா உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ், ஒமிக்ரான் என மாற்றம் கண்டு பல நாடுகளில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்களுக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தின. ஆனால், கொரோனா மேலும் மேலும் உருமாறி மக்களை பாதிப்பதால் பல நாடுகள் மூன்றாவது தவணை தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி என செலுத்தி வருகின்றன. இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உருமாறிய கொரோனாவைத் தடுக்க 4வது  தவணை தடுப்பூசியை அறிமுகம் செய்வது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றன. பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் அனைத்து நாடுகளும் ஏற்கனவே 2வது தவணை செலுத்திய தடுப்பூசியையே 3வது தவணையாகவும் செலுத்தி வருகின்றன.

இந்தியாவிலும் முதியோர், இணைநோய் உள்ளவர்களுக்கு முதற்கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘‘ஒமிக்ரானால் ஏற்படும் கொரோனா பாதிப்பால் அச்சப்படத் தேவையில்லை’’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் துறை விஞ்ஞான ஆலோசனை குழு தலைவர் டாக்டர் ஜெயபிரகாஷ் முலி தெரிவித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது.

``நம்மில் பெரும்பான்மையானோர் நோய் தொற்று ஏற்பட்டதையே அறியமாட்டோம். 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு எப்போது ஏற்பட்டது என்பது கூட தெரியாது’’ என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனாவில் இருந்து தங்களைக் காக்கும் ஆயுதம் என மக்கள் தடுப்பூசியையே நம்பியுள்ளனர். எனவே, நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசியை அதிகப்படுத்துவதன் மூலம் கொரோனா 3வது அலை பரவலுக்கு முடிவு கட்டமுடியும். அதற்கு அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். ஏனெனில், மற்றொரு கொரோனா முழு ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார இழப்புகளைத் தாங்க மக்கள் தயாராக இல்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்