SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை கட்சியிடம் மோத முடியாமல் மண்ணை கவ்விய தாமரை நிர்வாகியின் நிலையை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2022-01-12@ 00:28:09

‘‘உள்ளாட்சி தேர்தல் வரும் முன்பே கெத்து காட்டிய தாமரை நிர்வாகி, இப்போது அடக்கி வாசிக்கிறாராமே, ஏனாம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி  சிட்டி கார்ப்பரேஷன் எலக்‌ஷனில் மல்லுக்கட்ட அனைத்து கட்சிகளும்  ஆயத்தமாகிக்கிட்டு இருக்காங்க. இதில் ஏற்கனவே இலைகட்சி கூட்டணியில்  இருந்த மாம்பழம், கோயம்பேடு கட்சிகள் தனித்து போட்டியிடப்போவதாக  அறிவிச்சிட்டாங்க. இதை காரணம் காட்டி கூட்டணியில் இருக்கும் தாமரை கட்சி,  கூடுதல் வார்டுகள் கேட்டு கொடி பிடித்து வந்தது. அதாவது, 60 வார்டுகளில் 30 வார்டுகளை எங்களுக்கு தரணும் என்று மாநில நிர்வாகி  ஒருத்தரு கெத்து காட்டி கொக்கரித்தாராம். இதை கேட்ட இலையின் முக்கிய தலைகள் ஒரு சீட் என்று ஆரம்பித்தார்களாம். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாமரை தரப்பு 20, 10 என்று எண்ணிக்கையை குறைத்து கொண்டே வந்தாங்களாம். இதற்கிடையில் மாவட்ட  நிர்வாகிகள், படாதபாடுபட்டு 60 பேரிடம் விருப்ப மனுக்களை வாங்கி  வச்சிருக்காங்க. தனித்து போட்டியிடவும் தயாராக இருக்கிறோம் என்று  பில்டப் கொடுத்தாங்களாம். ஆனால் சமீபத்தில் 3 வார்டுகளுக்கு மேல்  உங்களுக்கு கிடைக்காது என்று உள்ளூர் இலைகட்சி முக்கிய நிர்வாகி ஒருத்தரு,  கறாராக சொல்லிட்டாராம். இதனால் ஷாக்காகி போன தாமரை கட்சி நிர்வாகிகள்,  அடுத்து என்ன செய்யலாம் என்று அதிர்ச்சி விலகாமல் ஆலோசனை செய்து வர்றாங்களாம்.  இதற்கிடையில் உள்ளூரில் முகாமிட்டிருக்கும் மாஜி விவிஐபியை சந்திச்சு, இது  தொடர்பா பேசவும் முடிவு செஞ்சிருக்காங்களாம். ஏற்கனவே இந்த தகவல் மாஜி விவிஐபிக்கு சென்றுவிட்டதாம். அவரும் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம். டெல்லி இதுவரை நமக்காக எதையும் செய்யவில்லை. இப்போது அவர்களின் கவனம் 5 மாநில தேர்தலில் இருக்கிறது. இனி நாம சொல்வதை தான் தாமரை கேட்க வேண்டும் என்று தன் அடிபொடிகளிடம் சொல்லி வர்றாங்க. இதனால மாங்கனி மாவட்டத்துல ஆரம்பத்துல கெத்து காட்டிய தாமரை நிர்வாகிகள் மண்ணை கவ்வும் நிலையில் இருக்காங்களாம்... மேலிடத்துக்கு விஷயத்தை கொண்டு சென்று இரட்டை இலக்கத்தில் சீட் வாங்க முயற்சி செய்யறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மதுபான பார்களில் இலை கட்சியினரின் ஆட்டம் தாங்க முடியவில்லையாமே, அப்படியா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவையில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் முறைகேடாக மது விற்பனை நடந்து வருகிறது. இலைக்கட்சி ஆட்சியில் டாஸ்மாக் மொத்த வசூலில் ‘அண்டா’ பெயரை கொண்ட ஒருவரும், பெண் கடவுள் பெயர் கொண்ட ஒரு எம்எல்ஏவும் வசூலில் ராஜாக்களாக மாறி கொடி கட்டி பறந்தாங்களாம். இப்போதும், காளப்பட்டி முதல் கவுண்டம்பாளையம் வரை சட்டவிரோதமாக மது விற்பனையில் அதிக விலை வைத்து சம்பாதித்து வர்றாங்க. கண்ணப்ப நகர் பகுதியில் மாலை 5 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் பல லட்சத்தை சுருட்டி விடுகிறார்களாம். பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை அதிகமாக இவர்கள்தான் எடுத்து இருக்காங்களாம். உயர்ரக மது வகைகள் வெளிகடைகளுக்கும், ஓட்டல்களுக்கும் அதிக விலைக்கு விற்று கரன்சிகளை குவித்து இருக்காங்களாம். இதைத் தட்டிக்கேட்கும் துணிவு எந்த அதிகாரிக்கும் இல்லையாம். சில முக்கிய நபர்களை சரிகட்டிவிட்டார்களாம். குவித்த பணத்தில் வணிக வளாகங்கள் கட்டி வருகிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஓய்வு பெற்றவரால் ஓயாத ெதால்லை என்று மாநகராட்சி ஊழியர்கள் ஏன் புலம்புறாங்க...’’ என கேட்டார் பீட்டர் மாமா.
நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், இங்கு ஊழியர்களுக்கு குறித்த தேதியில் சம்பளம் போடவே முடியவில்லையாம்.
கான்ட்ராக்டர்களுக்கு 6 மாதங்களுக்கு மேல் பில் பாக்கியாம். மின்சார கட்டணமும் 7 மாதங்கள் நிலுவையாம். இதற்கு மாநகராட்சியின் அநாவசிய செலவுதான் காரணமாம். குறிப்பாக கடந்தாண்டு ஆணையரின் உதவியாளராக இருந்து பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர், தற்போது பொறியாளருக்கு உதவியாளராக மீண்டும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பல நிரந்தர அலுவலக உதவியாளர்கள் போதிய வேலையின்றி சுற்றி வரும்போது, ஓய்வு பெற்ற நபருக்கு மீண்டும், பணி வழங்கியது ஏன் என்ற கேள்வியை சக ஊழியர்களே எழுப்பியுள்ளனர். இதுதவிர அனைத்து வார்டுகளிலும், தெருவிளக்கு பராமரிப்பு தனியாருக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சியில் இந்த பணிகளை செய்து வந்த, பல நிரந்தர ஊழியர்களும், எந்த வேலையும் இன்றி ஹாயாக பகலிலேயே மாநகராட்சிக்கு சொந்தமான முக்கடல் அணை, பில்டர் அவுஸ் என அரட்டை அடித்து பொழுதுபோக்கி வருகின்றனர். இதற்காக மாநகராட்சி சார்பில் 50 ஆயிரத்துக்கு மேல் சம்பளமும், இதர படிகளுமா என்ற கேள்வியையும் சக ஊழியர்களே எழுப்பி குமுறி வருகின்றனர். இது குறித்து நிர்வாகத்தின் தலைமைக்கு புகார்களாக தட்டி விட்டு இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறைக்குள் ஏன் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டாராமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மத்திய சிறையில க்யூஆர் டீமில் பணியாற்றிய ‘பட்டா’னவர் சிறைக்குள் கைதிகளை அடித்து துன்புறுத்துவதாக வந்துள்ள புகாரின் பேரில் க்யூஆர் டீமில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். பின்னர் உயர் அதிகாரிங்க மூலம் மீண்டும் க்யூஆர் டீம் பணியிடம் வாங்கி உள்ளார். இதையடுத்து சிறைக்கு வந்த ‘பட்டா’னவர், மீண்டும் சிறைக்குகள் கைதிகள் மாஸ்க் ஏன் போடவில்லை எனக்கூறி அடித்து துன்புறுத்தி வருகிறாராம். கடந்த வாரம் சிறைக்குள் இருந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவரை காரணமின்றி சரமாரியாக தாக்கி உள்ளாராம். இதில் படுகாயமடைந்த ஆயுள் தண்டனை கைதி அன்றிரவு சிறைக்குள் கழுத்தை அறுத்து கொண்டாராம். அவரின் அலறல் சத்தம் கேட்டு சிறை காவலர்கள் உடனடியான கைதியை மீட்டு சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறைக்குள் கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்த தகவல் வெளியே கசிந்து விடக்கூடாது என சிறை காவலர்களுக்கு உத்தரவு வந்ததாம். சிறைக்குள் சிறை காவலர்கள் தாக்கியதில் கைதி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் சிறை காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்