திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது: கோயிலில் மூலிகை கலவை தெளிப்பு
2022-01-12@ 00:02:08

திருமலை:திருப்பதி
ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்பு (உகாதி), ஆனிவார
ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும்
செவ்வாய்க் கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைப்பணி)
நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வரும் நாளை வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை
சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. 22ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக
பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதையொட்டி செவ்வாய்க்கிழமையான நேற்று
கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை நடந்தது.
அப்போது
மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு அனைத்து இடங்களும்
தூய்மைப்படுத்தப்பட்டது. பின்னர், பச்சைக்கற்பூரம், திருச்சூரணம், மஞ்சள்,
கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட
கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு பிறகு வழக்கம்போல்
பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு அறை ஒதுக்கீடு
நிறுத்தம்: கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறுகையில்,
‘‘திருப்பதியில் இன்று (நேற்று) முதல் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு
நிறுத்தி வைக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசிக்கு வரக்கூடிய
பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் அறைகள் வழங்குவதற்காகவே இந்த ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை மறுதினம் (நாளை) காலை 9
மணிக்கு தங்க ரதத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருள
உள்ளார். இதற்காக, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட 200 தேவஸ்தான பெண்
பணியாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் தங்கரதம் வடம் பிடித்து
இழுக்கப்பட்டு, நான்கு மாட வீதிகளில் சுவாமி வலம் வருவார்,’’ என்றார்.
Tags:
Tirupati Ezhumalayan Temple Vaikunda Ekadasi Alwar Marriage Temple Herb Mix Spray திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி ஆழ்வார் திருமஞ்சனம் கோயில் மூலிகை கலவை தெளிப்புமேலும் செய்திகள்
மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி கோர விபத்து: படுகாயமடைந்த 50 பயணிகளுக்கு தீவிர சிகிச்சை
இந்தியாவில் ஒரே நாளில் 9,062 பேருக்கு கொரோனா... 36 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
காஷ்மீர் காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பதவியை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்பு: நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் ராஜினாமா செய்ததால் பரபரப்பு
விவசாயிக்கு இலவச மின்சாரம் ரத்தானால் ஆழாக்கு கூட மிஞ்சாது: கடும் உணவு தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா
சுகாதார திட்டங்களுக்கான ஒன்றிய அரசு தரும் நிதியை விரைவாக பெற வேண்டும்: மாநிலங்களுக்கு அறிவுரை
தெலங்கானாவில் வாகனம், ரயில்கள் நிறுத்தம் இருந்த இடத்தில் 1 நிமிடம் தேசிய கீதம் பாடிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!