ஏறுமுகத்தில் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ரூ.35,896க்கு விற்பனை..இல்லத்தரசிகள் கலக்கம்..!!
2022-01-11@ 10:39:49

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 35,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கொரோனா, ஒமிக்ரான் தொற்று போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த விலை உயர்வு பிரச்சினையும் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாகக் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,487க்கும், சவரன் ரூ.35,896க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60க்கு விற்கப்படுகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 160 ரூபாய் சரிந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,472 ரூபாய்க்கும், ஒரு சவரன் 35,776 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது பண்டிகை நாட்களின் தங்கத்தின் விலை சற்று உயர்வை கண்டிருப்பது இல்லத்தரசிகளை கவலையடைய செய்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 குறைந்தது
மக்களே தங்கம் வாங்க சரியான நேரம்...சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.39,120-க்கு விற்பனை
தங்கம் விலையில் அதிரடி; காலையில் குறைந்து மாலையில் அதிகரிப்பு: நகை வாங்குவோர் குழப்பம்
ரூ. 38 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை.: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.38,880-க்கு விற்பனை
சரிவுடன் தொடங்கிய தங்கவிலை... சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!