வெற்றி காண்போம்
2022-01-11@ 00:06:11

தமிழக மக்களின் தேவைகளை அறிந்து, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. புதுப்புது திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் என்பதால், அதற்கு ஏற்ப திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் எந்த திட்டத்தையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு அரசின் செயல்பாடு மிக சிறப்பாக உள்ளது. தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. பேரிடர் உள்ளிட்ட சவால்களை எதிர் கொண்டாலும், முதல்வரின் முயற்சியால் விரைவில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
திட்டங்களை அறிவிப்பதிலும், அதை விரைந்து செயல்படுத்துவதிலும் தமிழக அரசு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. குறைந்த காலத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் முதல்வருக்கு நன்கு தெரியும். அந்த அளவுக்கு அவர் அனைத்து இடங்களுக்கும் சென்று மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். அதனால் தான் ‘‘மக்களின் முதல்வர்’’ என பொதுமக்கள் அழைத்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் முதல்வராக கிடைத்தது தமிழகத்துக்கு பெருமை என மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த தமிழக அரசு வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.நமக்கான முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று மக்கள் சொல்லி வருகின்றனர். மனுக்கள் அளித்தால், தீர்வு கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர். இதனால் தான் ஏராளமான மக்கள் மனு அளிக்கின்றனர். தகுதியுள்ள மனுக்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வரின் முயற்சியால் தான் குறுகிய காலத்தில் தமிழகம் வளர்ச்சியை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளது.
அடுத்த தலைமுறையினரும் பாராட்டி வரும் வகையில் திடமான கட்டமைப்புகளை முதல்வர் ஏற்படுத்தி வருகிறார். அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களையும் முதல்வர் நிறைவேற்றி வருகிறார். சமீபகாலமாக மக்களை குழப்பவும், பிளவுபடுத்தவும், சமுதாயத்தில் வன்முறை தூண்டும் வகையில் அவதூறு பரப்பப்பட்டன. இவைகள் அனைத்தும் தமிழக மக்களிடம் தவிடு பொடியானது. இதனால் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர். முக்கியமாக, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கிற்கு பொதுமக்களும் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். முக்கியமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொருவரும் கடைபிடித்து நடந்தால் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். கொரோனா குறித்து அச்சம் வேண்டாம், விழிப்புணர்வு இருந்தாலே போதும். மக்களின் முழு ஒத்துழைப்போடு கொரோனா (ஒமிக்ரான்) பரவலை கட்டுப்படுத்தி தமிழக அரசு வெற்றி காணும்.
மேலும் செய்திகள்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!