SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி

2022-01-09@ 00:36:33

தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அரசு நிர்வாகத்தில் பெரிய மாறுதல்களை சத்தமில்லாமல் செய்து வருகிறார்கள். ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான  ஆட்சி இன்று நம் தமிழகத்தில் நடக்கிறது. கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன் என எங்கும் ஊழல், எதிலும் முறைகேடு என்று தமிழகத்தை படுபாதாளத்தில் தள்ளியது முந்தைய அதிமுக ஆட்சி. அரசு துறைகளில், நிறுவனங்களில் பணியாளர்களை நியமிப்பதில் இமாலய முறைகேட்டில் எடப்பாடி ஆட்சி ஈடுபட்டது.

உதாரணத்துக்கு 20 நாட்கள் ஊருவிட்டு ஊரு தப்பி ஓடி கர்நாடகாவில் போலீசிடம் சிக்கிய மாஜி அமைச்சர், ராஜேந்திர பாலாஜி மீதான குற்றம் என்ன தெரியுமா? பால்வளத் துறை அமைச்சர் பொறுப்பு வகித்த அவர், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.10 கோடி மோசடி செய்ததாக குவிந்த புகார்கள்தான். ஏமாந்தவர்கள் ஒருபுறம் இருக்க, போதுமான தகுதி, திறமை இல்லாமல் பணத்தை மட்டுமே கொடுத்து வேலை வாங்கியவர்கள் பலர். ஆட்கள் தேவைக்கான அறிவிக்கை கூட வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், ரகசியமாகவே பணிநியமனங்கள் நடந்து முடிந்த சம்பவங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் ஏராளம். பணம் வாங்கிக் கொண்டு ஆட்களை நியமித்தாலும்  எழுத்து தேர்வு, நேர்காணல் என்ற நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. ஆனால், அவை நியமனங்களில் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் முறைகேடுகளும், ஊழல்களும் பெருக வழி வகை செய்தன.

இது குறித்து திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வெளிப்படையான நேர்மையான தேர்வு முறை நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில், புதிய சட்டம் ஒன்றை தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம். அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ்  வரும் அதிகார அமைப்புகளில் உள்ள பணியிடங்கள் டி.என்.பி.எஸ்சி மூலம் நிரப்பப்படும். இந்த ஒரே சட்டத்தின் மூலம் அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த பணிநியமன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்துக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்வது, நியமனங்களில் ஊழலைத் தடுக்க உதவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. வெளிப்படையான பணியாளர் தேர்வு, ஏழை, எளிய, கிராமப்புற இளைஞர்களுக்கு  வரப்பிரசாதமாகும்.  தகுதியும், திறமையும் இருந்தால் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அரசு பணியாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மையை புகுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  வேலை தேடி வரும் இளைஞர்கள் சார்பில் நன்றி. 

Like Us on Facebook Dinkaran Daily News
 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

 • canata-storm-24

  வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

 • north111s

  உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

 • sandjakki11

  "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்