கரன்சி இல்லாமல் கதறும் மாங்கனி கட்சி நிர்வாகிகள் கட்சி தாவும் முடிவில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா
2022-01-09@ 00:05:47

‘‘திருவாரூர் மாவட்டத்துல மாம்பழம் கசப்பதாக நிர்வாகிகள் பேசிக்கிறாங்களாமே’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘திருவாரூர் மாவட்டத்தில் மாங்கனி கட்சி வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்களும் நியமிச்சாங்க. வடக்கு மாவட்ட செயலாளராக பிரபல சாமியின் பெயரை கொண்டவரும், தெற்கு மாவட்ட செயலாளராக மில்க் பெயரில் உள்ளவரும் இருந்து வர்றாங்க.உள்ளாட்சி தேர்தல்தொடர்பாக இந்த மாவட்டத்தில் மாங்கனி கட்சியில் பொறுப்பாளர்கள் கூட்டம் கூட இதுவரை நடக்கவே இல்லையாம். விரைவில் நடை பெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செலவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் மாவட்ட செயலாளர்கள் இரண்டு பேரும் புலம்புகிறாங்க. நம்ம மீது தொண்டர்கள் அதிருப்தியாக இருப்பதற்கு நாம என்ன செய்ய முடியும். தலைமையில் பல கோரிக்கைகள் வைத்தும் அவங்க செவி சாய்க்கவில்லை என்று தொண்டர்களிடம் சொன்னால் நமக்கு தானே அசிங்கம். அதுதான் மாவட்ட கூட்டத்தை கூட்டாமல் இருக்கோம். எத்தனை ஆண்டுகளுக்கு தான் சொந்த பணத்தை செலவு செய்வது... கரன்சி இல்லாவிட்டால் உள்ளாட்சி தேர்தலில் நிற்க முடியாது. அதற்கு கரன்சியும் இல்லை. எதை நம்பி கடன் வாங்குவதுனு நினைக்கிறாங்களாம். இதனால் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வரும் நிர்வாகிகள் மாங்கனியை விட்டு வெளியேற முடிவு எடுத்து விட்டார்ங்கணு பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி மில்க் மந்திரியை இலை கட்சியின் பெரும்பாலான தொண்டர்கள் மதிக்கவே இல்லையாமே, ஏனாம்...’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.‘‘விருதுநகர் மாவட்டத்தின் மாஜி மில்க் மந்திரி, பண மோசடி வழக்கில் தலைமறைவாகி சமீபத்தில், கர்நாடக மாநிலத்தில் கைது செய்தாங்க. பத்தாண்டாக மந்திரியாகவும், இலை கட்சியின் மாவட்ட செயலாளராகவும் இருந்தவர். இப்படி பட்ட நபரை கைது செய்து உள்ளூர் கொண்டு வந்தால் போலீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலைக்கட்சியினர் குவிந்து ஆர்ப்பாட்டம் செய்தால் என்ன செய்வது என்று போலீஸ் அதிகாரிகள் பெரிதாக அலட்டிக்ெகாள்ளவில்லையாம். அதற்கு ஏற்றார்போல, நாற்பதுக்கும் குறைவாகவே மாஜி மில்க் மந்திரியின் அடிபொடிகள் வந்தார்களாம். சும்மா ஒரு கோஷம் போட்டுவிட்டு போயிட்டாங்க. அதே சமயம், இலைக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் எவருமே வராதது ஒரு புறமிருக்க, ஓரிருவர் தவிர நகர, ஒன்றிய செயலாளர்களிலும் ஒருவர் கூட வரவில்லையாம். அவர் மில்க் மந்திரியாக இருந்தபோது நம்மை மதிக்கவே இல்லை. சம்பாதித்த பணத்தை அவரே வைத்து கொண்டார். தொண்டர்களுக்கு ஒரு உதவியும் ெசய்யவில்லை. இவர் செஞ்ச தப்புக்கு நாம ஏன் சப்போர்ட் செய்யணும்னு சொந்தக் கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பஞ்சாயத்து செயலாளர்கள் அடங்க மாட்டார்கள் போல... அடக்கிறதுக்கு என்ன வழியாம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டம் செங்கம் ஒன்றியத்துல 44 கிராம பஞ்சாயத்துக்கள் இருக்குது. இதுல 20க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்கள்ல, பழம் தின்னு கொட்டை போட்ட பஞ்சாயத்து செயலாளருங்க இருக்காங்க. இவங்க, பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகள்ல மின்சாதன பொருட்கள் தொடங்கி, குடிநீர் பைப் வாங்குறது வரைக்கும் அவங்களுக்கு கமிஷன் வர்ற கடையிலத்தான் வாங்க வைக்கிறாங்களாம். அதுமட்டுமில்லாம நூறு மதிப்புள்ள பொருளை வாங்கி இருநூருன்னு கணக்கு எழுதி பாதிக்கு பாதி கமிஷன் வாங்குறாங்களாம். அடிப்படை வசதிகள் மேற்கொள்றது சம்பந்தமா, பஞ்சாயத்து தலைவரையோ, துணைத்தலைவரையோ கூட கலந்தாலோசனை செய்யறதில்லையாம். வரிவசூல் செய்ற பணத்த ஒரு மாதம் வரைக்கும் வெச்சிகிட்டு, செழிப்பாக இருக்காங்களாம். தலைவருங்க, பிடிஓங்ககிட்ட புகார் சொன்னா.. அவங்க எங்களையே மதிக்கிறதில்லைன்னு அங்கிருந்து புலம்பல் சத்தம் வருதாம். இதுக்கெல்லாம் காரணம், பஞ்சாயத்து செயலாளருங்க, மாவட்ட அளவுல உயரதிகாரிகளோட தொடர்ப வெச்சிகிட்டு, அவங்களுக்கு சம்திங் கொடுத்து சரிகட்டுறதுதானாம்...’’ என்றார் விக்கியானந்தா‘‘கோவை மாநகராட்சியில மீண்டும் வசூல் வேட்டை தொடங்கி இருக்குபோல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சியில் உள்ள நகரமைப்பு பிரிவு அலுவலகம், ஐந்து மண்டல அலுவலகங்களில் இயங்கும் உதவி நகரமைப்பு பிரிவு அலுவலகம் என இந்த ஆறு அலுவலகங்களும் நாள் முழுக்க பிஸியாவே இயங்குகிறது. காரணம், கட்டிட வரைபட அனுமதி தொடர்பாக இங்கு குவியும் பைல்கள்தான். இது, வெறும் பைல்கள் அல்ல. இவை, ஒவ்வொன்றும் பண மூட்டை என சொல்லும் அளவுக்கு இப்பிரிவு அதிகாரிகளின் செயல்பாடு உள்ளது. எல்லா ஆவணங்களும் முறையாக சமர்ப்பித்தாலும் இப்பிரிவில் இருந்து அவ்வளவு எளிதில் கட்டிட வரைபட அனுமதி பெற முடியாது. நகர்த்த வேண்டியதை நகர்த்தினால்தான், பைல்கள் நகரும். இங்கு, கரன்சி நடமாட்டம் அதிகரித்து விட்டதால், விஜிலென்ஸ் ரெய்டு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், அதை எதிர்கொள்ளவும் இங்குள்ள சில அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். எப்போது ரெய்டு வந்தாலும், எங்களிடமிருந்து எந்த பணத்தையும் பறிமுதல் செய்ய முடியாது என்கிறார்கள்.
காரணம், ஒரு டிராவல்ஸ் உரிமையாளர் பாதுகாப்பாக உள்ளார். கரன்சி டீலிங் செய்வது எல்லாமே இவர்தானாம். இவர், கடந்த இலைக்கட்சி ஆட்சியில், ரொம்பவே கோலோச்சி வந்தார். ஆட்சி மாற்றம் காரணமாக, சில மாதங்கள் சைலண்ட்டாக இருந்தார். தற்போது மீண்டும் ஆட்டத்தை துவக்க ஆரம்பித்து விட்டதாக சொல்றாங்க. அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டிய பைல்களை எல்லாம் இவர்தான் ஆய்வு செய்கிறார். இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள், பச்சை கம்பளம் விரித்து வரவேற்கிறாங்களாம்... எல்லாம் கரன்சி படுத்தும்பாடு என்கிறார்கள் கீழ் நிலை ஊழியர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
மேலும் செய்திகள்
தேனி அணியை சேர்ந்த மாஜி மந்திரியை ஓரங்கட்டி கெத்து காட்டிய சேலம் அணியின் தந்திரத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
புல்லட்சாமி மீது கடும் கோபத்தில் இருக்கும் ஷாக் துறை ஊழியர்களின் நிலையை சொல்கிறார் : wiki யானந்தா
கரன்சி கொடுத்து மாநிலங்களவை எம்பி பதவி வாங்கும் இலை கட்சி வாரிசு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
மாவட்டத்தில் இலை காலியாவதால் டென்ஷனில் இருக்கும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
கோடிகோடியா சுருட்டினவங்க இருக்க... நாங்க ஏன் செலவழிக்கணும்னு குமுறும் இலைக்கட்சி பிரமுகர்கள்பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
ஏகப்பட்ட ஆட்கள் கட்சியில் சேர வர்றாங்க என பில்டப் கொடுத்து ஏமாற்றிய தாமரை கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!