SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.35,936- க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

2022-01-08@ 11:35:25

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 4,492-க்கும், சவரன் ரூ. 35,936- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 64.80- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,888-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ஒரு கிராம் ரூ.4,486-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4,492க்கு விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.128 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,936 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று சென்னையில் இன்று 24 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,858 என்றும் ஒரு சவரன் ரூ.38,864 எனவும் விற்பனையாகி வருகிறது. மேலும், சென்னையில் இன்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து, ரூ.64.60 எனவும், ஒரு கிலோ விலை ரூ.64,600 எனவும் விற்பனையாகி வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

  • odisha_park

    இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்