SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் விலை திடீர் சரிவு ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 குறைந்தது

2022-01-07@ 00:14:41

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்தது. தங்கம் விலை கடந்த 4 மாதத்திற்கும் மேலாக அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. சில நேரத்தில் தொடர்ந்து அதிரடியாக விலை உயர்வதுமான போக்கும் நிலவியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,530க்கும், சவரன் ரூ.36,240க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.4,500க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.36 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த வாரம் பொங்கல் திருநாள் மற்றும் முகூர்த்த தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் நகை விலை குறைந்துள்ளது விஷேச தினங்களில் நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்