SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிரட்டும் கொரோனா

2022-01-07@ 00:14:32

இந்தியாவில் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது. அனைத்து மாநிலங்களிலும் வேகமாக பரவி மிரட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. 5 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்திய இரண்டு நாளில் ஒரு கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாறுபட்ட வைரசான ஒமிக்ரான், தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தாலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனால் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் அளிக்க அரசு ஆலோசித்து வருகிறது. தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் கவலைக்குரியதாக அறிவித்துள்ள ஒன்றிய அரசு இம்மாநிலங்களில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அமைச்சர்களும், நடிகர்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிவருகிறார்கள். மகாராஷ்டிராவில் 20 எம்எல்ஏக்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இப்படி யாரையும் விட்டு வைக்காமல் கொரோனா தனது கோர தாண்டவத்தை மீண்டும் காட்டத்தொடங்கியுள்ளதால் முககவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அரியானாவில் திரையரங்கம், மல்டிபிளக்ஸ்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா 3வது அலை உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே இம்மாதம் முழுவதும் கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. நோயின் தீவிரத்தை பொறுத்து அடுத்தடுத்த மாதங்களில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருக்கிறது. நோய் தீவிரம் குறைந்தால் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அடுத்த சில மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். எனவே, மக்கள் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். பொது இடங்களில் முககவசம் அணியாமல் செல்லக்கூடாது. கூட்டம் அதிகமுள்ள இடங்களில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும். பஸ், ரயில் பயணத்தின் போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையாகும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்