மாற்றுக் கட்சிக்கு தாவ தயாராக இருக்கும் தொண்டர்களை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
2022-01-06@ 02:05:11

‘‘மாற்று கட்சிக்கு தாவ தயாரா இருக்காங்களாமே கோயம்பேடு கட்சி தொண்டர்கள்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் கோயம்பேடு கட்சியின் மாநகர செயலாளராக முத்தானவரும், புறநகர் மாவட்ட செயலாளராக சிவமானவரும் இருந்து வருகிறார்கள். எப்போதாவது தான் கோயம்பேடு கட்சியினரின் கூட்டம் மாவட்டத்தில் நடக்குமாம். அப்படியே 2 நிர்வாகிகளும் தனித்தனியாக கூட்டம் போட்டாலும் தொண்டர்கள் யாரும் கூட்டத்துக்கு வருவது கிடையதாம்... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விட்டமின் ‘ப’ இல்லாததால் கட்சியினர் யாரும் ஆர்வம் காட்டவில்லையாம்... இதனால் இரண்டு நிர்வாகிகளும் கடும் அப்செட்டில் உள்ளார்களாம்.. இந்த விவகாரம் கோயம்பேடு தலைமைக்கு தெரிந்தும் எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் மவுனமாக இருந்து வருகிறதாம். டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் தற்போது கோயம்பேடு கட்சியின் செயல்பாடு இல்லாததால் மாற்று கட்சிக்கு தாவ அதற்கான வேலையில் நிர்வாகிகள், தொண்டர்கள் இறங்கி இருப்பதாக சொந்த கட்சிக்குள்ளே அரசல்புரசலாக பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சி ஆதரவாளரின் ஆட்டம் இன்னும் அடங்கலையாமே..’’
‘‘ஹனிபீ மாவட்டத்தின் ‘பிக் பாண்ட்’ வட்டார அலுவலரான ஐந்தெழுத்துக்காரர், கடந்த ஆட்சியில் இலைக்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு தொடர்ந்து கோலோச்சி வந்தார். தொடர்ந்து உள்ளூர் இலைக்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இவர், புதிய அரசின் திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இவர் தற்போது சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டிருக்கிறார். காலிப்பணியிடத்தை மற்றொரு அலுவலரானவர் கூடுதல் பணியாக கவனித்து வரும் நிலையில், அங்கிருந்தபடியே முந்தைய இலைக்கட்சி காலத்தைச் சேர்ந்த ஆதரவு அதிகாரிகளின் முயற்சியில், மீண்டும் பழைய இடத்திற்கே வந்து விடுவேன் என சவால் விடுகிறாராம். தனக்கு முன்பு ஆதரவாக இருந்த இலைக்கட்சி பிரமுகர்களையும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவரை மீண்டும் இந்தப்பக்கம் அனுப்பிடாதீங்க என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை அனுப்பி வருகிறார்களாம்’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘உள்ளாட்சிகளில் கணவர்கள் ஆதிக்கத்தால் அதிகாரிகள் புலம்புவதாக சொல்றாங்களே..’’
‘‘உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்று பொறுப்பு வகிக்கும் பெண்களின் கணவர்களின் ஆதிக்கம்தான் எங்கும் உள்ளது. கார்த்திகை தீப மாவட்டத்தில் வாசி என முடியும் தொகுதிக்கு உட்பட்ட ஆயிலமான ஊராட்சியில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொகுதி எம்எல்ஏ தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக வந்த அந்த பகுதி வார்டு உறுப்பினரின் கணவருக்கு பள்ளி தலைமையாசிரியர் சால்வையை போட முயன்றாராம். அதை அவர் கோபமாக தட்டி விட்டு சென்றாராம். இதனால் அதிர்ச்சியில் தலைமையாசிரியர் உறைந்து நின்றாராம். இதுபோன்று பெரணமான ஒன்றியத்தில் உள்ளாட்சி பொறுப்புகளின் உள்ள பெண்களின் கணவர்களின் ஆதிக்கத்தால் அதிகாரிகள் ஆடிப்போயுள்ளார்களாம். இதுபற்றி யாரிடம் சொல்லி தங்கள் குறையை களைவது என்று கையை பிசைந்து வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘இலையா, தாமரையானு இழுபறி நீடிக்குதாமே..’’
‘‘தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான சீட்டை பெற இலைக்கட்சி கூட்டணியில் நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை அக்கட்சியின் பொறியாளர் ஒருவரின் மனைவிக்கு மேயர் பதவிக்கான சீட் கொடுப்பது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு விட்டது. இதற்கு கட்சியில் எதிர்ப்பு என்பது பெரிதாக இல்லை. மாஜி மேயர் ஒருவர் மீண்டும் அப்பதவியை பிடிக்க மாஜி முதல்வர் எடப்பாடி மூலம் முயற்சி மேற்கொண்டார். ஆனால், மாஜி முதல்வர் வளைந்து கொடுக்காத காரணத்தால், அந்த முயற்சி எடுபடாமல் போய்விட்டது. இதற்கிடையில், தாமரை கட்சியை சேர்ந்த பெண் தலைவி ஒருவர் இம்முறை மேயர் பதவியை நாம்தான் பிடிக்க வேண்டும் என டெல்லி மேலிடம் மூலம் அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளார். இது, அதிமுக தலைவர்களுக்கு பெரும் குடைச்சலை கொடுத்துள்ளது. கோவை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால், இலைக்கட்சி கூட்டணியில் இலையா, தாமரையா என்ற இழுபறி நீடித்து வருகிறது. இரு கட்சி தொண்டர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிலை உள்ளது என்கிறார்களே.. என்ன விஷயம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இங்குள்ள நோயாளிகளின் பாதுகாப்புக்காக தனியார் செக்யூரிட்டிகள் ஒவ்வொரு வார்டுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களை அனுமதிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். சமீப காலமாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் செல்போன்கள் திடீரென காணாமல் போனது. இதுபோல் டாக்டர்கள், ஊழியர்கள் வைத்திருந்த செல்போன்களும் மாயமானது. இதனால் திருட்டு ஆசாமிகள் யாராவது திட்டம்போட்டு திருடுகிறார்களா என மருத்துவமனை நிர்வாகம் கண்காணித்தது. ஆனால், பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டியே செல்போன் திருடும் வேலையில் ஈடுபட்டது கண்டு மருத்துவமனை நிர்வாகம் திடுக்கிட்டது. இதையடுத்து அதிரடியாக அந்த செக்யூரிட்டியை டிஸ்மிஸ் செய்து தனியார் செக்யூரிட்டி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதை மருத்துவமனை வட்டாரத்தில் விவாத பொருளாகி உள்ளது’’ என்றார் விக்கியானந்தா.
Tags:
wiki யானந்தாமேலும் செய்திகள்
தேனி அணியை சேர்ந்த மாஜி மந்திரியை ஓரங்கட்டி கெத்து காட்டிய சேலம் அணியின் தந்திரத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
புல்லட்சாமி மீது கடும் கோபத்தில் இருக்கும் ஷாக் துறை ஊழியர்களின் நிலையை சொல்கிறார் : wiki யானந்தா
கரன்சி கொடுத்து மாநிலங்களவை எம்பி பதவி வாங்கும் இலை கட்சி வாரிசு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
மாவட்டத்தில் இலை காலியாவதால் டென்ஷனில் இருக்கும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
கோடிகோடியா சுருட்டினவங்க இருக்க... நாங்க ஏன் செலவழிக்கணும்னு குமுறும் இலைக்கட்சி பிரமுகர்கள்பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
ஏகப்பட்ட ஆட்கள் கட்சியில் சேர வர்றாங்க என பில்டப் கொடுத்து ஏமாற்றிய தாமரை கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!