SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னோடி மாநிலம்

2022-01-06@ 00:01:22

கடந்த மே 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இரண்டாவது அலை படுதீவிரமாக பரவிய அந்த காலக்கட்டத்தில் முதல்வர் எடுத்த தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பரவலை வெகுவாக கட்டுப்படுத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கைகளை, நேற்று துவங்கிய புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்ட உரையின்போது, கவர்னர் ஆர்.என்.ரவி வெகுவாக பாராட்டி உள்ளார். அவரது உரையில், ‘‘பதவியேற்ற முதல் நொடியில் இருந்தே ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் முடுக்கி விட்டு, மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி, ஆக்சிஜனும் அத்தியாவசிய மருந்துகளும் கிடைப்பதை உறுதிசெய்து, தடுப்பூசி பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, கொரோனா இரண்டாவது அலையை திறம்பட கையாண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை மனமார பாராட்டுகிறேன். பெருந்தொற்றை இந்த அரசு வெற்றிகரமாக கட்டுப்படுத்திய முறை நமது நாட்டிற்கே முன்னோடியாக அமைந்தது’’ என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் லட்சக்கணக்கான தடுப்பூசி டோஸ்கள் வீணடிக்கப்பட்டதாக ஒன்றிய சுகாதாரத்துறை வேதனை தெரிவித்திருந்தது. அதாவது, முதல் தவணை 8.09 சதவீதம், 2வது தவணை 2.84 சதவீத அளவே போடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 8 மாதங்களில் இந்த சதவீதம் அதிரடியாக உயர்ந்தது. இதற்கு வார இறுதி நாளில் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு அமல்படுத்தியதும், இதுதொடர்பாக மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரங்களுமே முக்கிய காரணம். இதனாலேயே கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு தமிழகத்தில் பெருமளவு குறைந்துள்ளது. இதையும் கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகளை கொண்டவர்களில் பலர்,  மருத்துவமனைகளுக்கு சென்று உரிய சிகிச்சை முறைகளை பெற முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்பட்டதை உணர்ந்த தமிழக அரசு ‘‘மக்களை தேடி மருத்துவம்’’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதன்மூலம் சுமார் 43 லட்சம் பேர் வரை பயனடைந்துள்ளனர். மேலும், தெற்காசியாவிலேயே தமிழகம் பொருளாதாரரீதியாக வளர்ச்சி பெற்ற மாநிலமாக திகழ, முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தினார். இதன்மூலம் 1.74 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றிடும் வகையில், 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இதில் சுமார் ரூ.21,508 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் தமிழகம் பெருமளவு முதலீடுகளை ஈர்த்துள்ளதையும், அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகளையும் கவர்னர் பாராட்டி உள்ளது கவனிக்கத்தக்கது. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை குடிசைகளில்லா மாநிலமாக மாற்ற வேண்டும். அங்கு வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த வேண்டுமென்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டம் என உரையாற்றியது தான் ஹைலைட். ஆட்சிப் பொறுப்ேபற்றது முதல், அல்லும் பகலும் அயராது உழைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை மிக விரைவில் அதிகப்பட்ச வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வார் என்பது உறுதி.

Like Us on Facebook Dinkaran Daily News
 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

 • canata-storm-24

  வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

 • north111s

  உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

 • sandjakki11

  "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்