SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்த 5 சவரன் நகையை இலை கட்சியினர் சொந்த காசில் மீட்கும் ரகசியம் குறித்து சொல்கிறார் wiki யானந்தா

2022-01-04@ 01:53:06

‘‘பார்டர் தாண்டி நிர்வாகியை போட்டதால மாம்பழ கட்சி தொண்டர்கள் கொதிப்பில் இருக்காங்களாமே, அப்படியா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘  2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல்ல, மாம்பழ கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமைச்சு ஆட்சியை பிடிப்பேன்னு  அக்கட்சியின் தலைமை முழங்கி வருது. இதை கேட்ட அந்த கட்சி தொண்டர்கள் நமட்டு சிரிப்பு  சிரிக்கிறாங்க. காரணம், வடமாவட்டங்களில் நாங்க வலுவான கட்சினு மாம்பழ கட்சி தலைவர் சொன்னாலும்,  இப்ப நிலைமை தலைகீழா இருக்காம். வெயிலூர் மாவட்டத்துல,  இளமையானவரை செயலாளரா போட்டதில் இருந்து ஒரே ரகளையாம். அதெப்படி வேற  மாவட்டத்தை சேர்ந்தவரை இன்னொரு மாவட்டத்துக்கு செயலாளரா போடலாம். ஏற்கனவே இங்க அணையான ஊர்ல  வேட்பாளரா அறிவிச்சு நாங்க பட்டபாடு போதாதா. மாநில பொறுப்புல இருந்தப்பவே  கட்சியை வளர்க்கவில்லைனுதான் அந்த பொறுப்பை பறிச்சாங்க. இப்ப மாவட்டத்துல  போட்டுட்டு என்ன சாதிச்சிட ேபாறாருனு தெரியல என்று தொண்டர்கள் மத்தியில கேள்வி எழுந்து இருக்காம். இங்கேயே நல்ல பசையான,  கட்சியிலே நல்லா வேலை செய்யக்கூடியவங்க இருக்கிறாங்க. நெருப்பை பேர்ல  கொண்டவரும், கண்ணனின் வேறு பெயரில் ‘புரு’வை ஆரம்பமா கொண்டவரும்னு பலரும்  இருக்கிறாங்க. அவங்களை மாவட்ட செயலாளரா போட்டாத்தான் 2026 எலக்‌ஷன்ல  ஏதாவது பண்ண முடியும்னு. அதை பத்தி மாநில தலைமையிடமும் பேசிவிட்டோம். ஆனால்  தலைமை கேட்கிறதாக இல்லை.. இப்படி இருந்தால் நாங்கள் எப்படி வேலை செய்வோம்...’’ என்று கட்சி பணியில் இருந்து நழுவும் வேலையில் இறங்கி இருக்காங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியினர் செய்துள்ள தில்லாலங்கடி வேலையில் ஒன்றை சொல்லுங்க பார்ப்போம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சேலம்  மண்டலத்தில் விஜிலென்ஸ் ரெய்டு, கவர்மென்ட் வேலை என்று மோசடி செய்து கல்லா கட்டிய இலைகட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்காங்க. இதுபேதாதென்று, பழைய பிரச்னை புது ரூபத்தில் அவர்களின் தலைமேல் கத்தியாக தொங்குகிறதாம். கூட்டுறவு சங்கங்களில்  நகைக்கடன் என்ற பெயரில் பினாமிகள் பெயரில் லட்சக்கணக்கில் இலை கட்சியினர் சுருட்டியிருப்பது மெல்ல, மெல்ல கசிய ஆரம்பிச்சிருக்காம். 5  பவுனை அடகு வச்சவங்களின் கடன் அப்படியே ரத்தாகி விடும் என்ற நினைப்பில்  இருந்தவர்களுக்கு.. புதிய அரசின் அதிரடி ஆய்வு, கிலியை ஏற்படுத்தி இருக்காம்.  இதில் பல கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் கூண்டோடு சிக்கப்போறதாகவும்  பேசிக்கிறாங்க. இதற்கிடையே கூட்டு போட்டு தரமில்லாத நகைகள், கவரிங் நகைகளை அடகு வைத்தும் பணத்தை பார்த்துள்ளனர். தள்ளுபடியானால் போலி நகைகளை நம்மிடமே தந்துவிடுவார்கள். நமது மோசடி வெளியாகாது என்று இலை கட்சியினர் நினைத்து இருந்தார்களாம். ஆனால், ஆய்வு நடப்பதால், கவரிங் நகை கான்செப்ட் வெளியானால் மானம் போய்விடும், ஜெயிலுக்கு போகணுமே என்ற பயத்தில், அடமானம் வைத்த 5 சவரன் கவரிங் நகைகளை சத்தமில்லாமல் மீட்க முடிவு செய்து இருக்காங்களாம். இதற்காகவே சிலர் அஞ்சு பவுன் நகைக்கடன்  தள்ளுபடி கேட்டு அப்ளிகேஷன் போடாமல், சொந்த  செலவில் நகையை திருப்பி வர்றாங்களாம். என்னதான் ஐடியாக்களை அள்ளிவிட்டாலும், அதிகாரிகளின்  என்கொயரிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் சில தலைகள்  தள்ளாடிக்கிட்டு இருக்காம்... அதாவது அடமான நகைகளை மீட்க பணத்தை கொடுத்தாலும் செக் செய்ேத நகையை அளிக்கிறார்களாம்... இதனால பயத்துல இலை தலைகள் இருக்காங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இருந்தாலும் இப்படி ஒரே அடியாக அட்வான்ஸ் ஆக இருக்கக் கூடாது என்று பிற அரசியல் கட்சியினர் சொல்கிற அளவுக்கு பருத்தி மாவட்டத்தில் என்ன நடக்குது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஊரக உள்ளாட்சி தேர்தலில் இலை கட்சியினர் படுதோல்வி அடைந்தனர். அடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தகிடுதத்த வேலையில் இலை கட்சியினர் ஈடுபட்டுள்ளார்களாம். இதற்காக நகர்புற உள்ளாட்சி தேர்தலே அறிவிக்காத நிலையில் பருத்தி சீமை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வாக்கு கேட்டு கிப்ட் டோக்கன் சப்ளை செய்யும் வேலையில் இலைகட்சியினர் களத்தில் இறங்கியுள்ளார்களாம். அந்த கிப்ட் டோக்கனில் கடையின் பெயர் கூட குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
அந்த குறிப்பிட்ட கடைக்கு நேரில் சென்று டோக்கனை வாக்காளர்கள் காண்பித்தால் போதுமாம். வீட்டுக்கு தேவையான பாத்திரம் உள்ளிட்ட கிப்ட் பொருட்கள் உடனடியாக கையில் கிடைக்குமாம். பருத்திசீமை மாவட்டத்தில் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் இலை கட்சியினரால் ஒரு ஒன்றியத்தையும் கூட கைப்பற்ற முடியவில்லையாம். இதனால் தான், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் இந்த தகிடுதத்த வேலையில் இலைகட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு இருப்பதாக மாவட்டம் முழுவதும் கட்சி தொண்டர்கள் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shortest-man-world-25

  மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

 • canata-storm-24

  வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

 • north111s

  உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்