தொண்டாமுத்தூர் அருகே ஆட்டுக்குட்டியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
2022-01-03@ 14:17:03

தொண்டாமுத்தூர் : கோவை அருகே தொண்டாமுத்தூர் அருகே உள்ளது வண்டிக்காரனூர். இந்த கிராமத்தை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் ஆடு மேய்த்தபோது ஆட்டுக்குட்டி ஒன்று திடீரென மாயமானது இதைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடிப் பார்த்ததில் முட்புதரில் ஆட்டை விழுங்கிய படி மலைப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாம்பு பிடிப்பாளர் தன்ராஜ், வேட்டை தடுப்பு காவலர் முருகன் ஆகியோர் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். அப்போது விழுங்கிக்கொண்டிருந்த ஆட்டு குட்டியை வெளியே துப்பியது. இருந்தும் ஆட்டுக்குட்டி பரிதாபமாக இறந்தது. மீட்ட மலைப்பாம்புவை தாளியூர் ஆணைமடுவு பள்ளத்தாக்கில் விடப்பட்டது.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!