SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறப்பான நடவடிக்கை

2022-01-03@ 00:13:21

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வீரியமிக்க வைரசாக உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 1525 பேர் ஒமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க புத்தாண்டு முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 10ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுனாமியைப் போல் கொரோனா 3ம் அலை பரவத் தொடங்கினாலும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் 5 நாள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாகவும், பிறகு வீட்டு தனிமையில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 87 சதவீதம் பேரும், 2வது தவணை தடுப்பூசியை 57 சதவீதம் பேரும் போட்டுள்ளனர். மீதமுள்ளோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள, வாரம்தோறும் ஒரு நாள் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்டது. இந்நிலையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் இன்று முதல் தீவிரமடைகிறது. தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணிகளை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். சிறார் தடுப்பூசிகளுக்கான முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், தமிழகத்தில் பலர் கோவின் செயலி மூலம் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். பள்ளிகளுக்கு நேரடியாக சென்று இத்தகைய தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதால், விரைவில் சிறார்களுக்கான தடுப்பூசி இலக்கினை அரசு அடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

முன்களப்பணியாளர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை வரும் 10ம் தேதி முதல் செலுத்திட தமிழக அரசு தயாராக உள்ளது. ஒன்றிய அரசு அதற்கான நெறிமுறைகளை வெளியிடும் முன்பே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 2ம் கட்ட கொரோனா அலை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருந்த நிலையில், முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும், துரித நடவடிக்கைகளால் நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தார். இப்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் தொற்றையும் ஒழித்திட தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதாக உள்ளது. பொதுமக்கள் நலனுக்காக அரசு தெரிவித்துள்ள நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றி அனைவரும் விழிப்புணர்வோடு இருந்தால், கொரோனாவின் 3வது அலையை எளிதாக எதிர்கொள்ளலாம்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • shortest-man-world-25

  மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

 • canata-storm-24

  வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

 • north111s

  உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்