புத்தாண்டில் சபரிமலையில் அலை மோதிய பக்தர்கள்: தரிசனம், நெய்யபிஷேக நேரம் அதிகரிப்பு
2022-01-02@ 01:16:17

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் பூஜைகள் தொடங்கின. தினமும் 60 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், தரிசன நேரமும், நெய்யபிஷேக நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி வரை அதிகாலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே நடை திறக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் முதல் இரவு 1 மணி நேரம் கூடுதலாக நடை திறக்கப்பட்டுள்ளது. இதன்படி இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
சுவாமிக்கு அதிகாலை 5 மணி முதல் பகல் 10 மணி வரை பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்து வந்தனர். தற்போது ஒரு மணி நேரம் அதிகரித்து 11 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறுகிறது. மேலும், பம்பை கணபதி கோயிலில் இருமுடி கட்டுவதற்கு 24 மணி நேரமும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று புத்தாண்டு தினம் என்பதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
மேலும் செய்திகள்
நாட்டுக்காக பதக்கங்கள் வென்றது டேபிள் டென்னிஸ்க்கே பெருமை!: தமிழ்நாடு வீரர் சரத்கமல் பேச்சு
2 தடுப்பூசி போட்டவர்களுக்கு ‘கோர்பிவேக்ஸ்’ பூஸ்டர் டோஸ்: ஒன்றிய அரசு அனுமதி
தமிழகத்திற்கு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது ஒன்றிய அரசு...
விற்பனையாகாததால் வேதனை சாலையில் டன் கணக்கில் தக்காளியை வீசிய விவசாயிகள்
75 வயது மாஜி ராணுவ வீரரின் 70 வயது மனைவிக்கு 54 ஆண்டுக்கு பின் ஆண் குழந்தை பிறந்தது: ராஜஸ்தானில் அதிசயம்
சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம்: கேரள அரசு அறிவிப்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!