SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வரின் அக்கறை

2022-01-02@ 00:06:43

2022  புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த ஆண்டிலாவது கொரோனா பிடியில் இருந்து மனிதகுலம் மீள வேண்டும் என்பதுதான் நம் எல்லோரின் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும். ஆனால், ஒமிக்ரான் வகை உருமாறிய கொரோனாவின் அச்சுறுத்தலோடு இந்த ஆண்டு துவங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். நிலைமையை சாதுர்யமாக கையாண்டு பேராபத்தில் இருந்து மக்களை முதல்வர்  பாதுகாத்தார். இப்போது, ஒமிக்ரான் மிரட்டுகிறது. பல மாநில அரசுகள் அவசரம் அவசரமாக இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பயங்கர கட்டுப்பாடுகளை அறிவித்துவிட்டன. ஆனால், நம் முதல்வரோ, மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து, சில புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

மற்ற மாநிலங்களை போல இரவு நேர ஊரடங்கை அவர் அறிவிக்கவில்லை. 8ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் கிடையாது. தியேட்டர், உணவகம், நகை, ஜவுளி கடைகள், உடற்பயிற்சி கூடங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி. இந்த கட்டுப்பாடுகளும், வரும் 10ம் தேதி வரை தான். ஒமிக்ரான் பரவலைத் தடுக்க  அரசு போட்டுள்ள கட்டுப்பாடுகள் மக்களின்  பாதுகாப்பிற்காகத்தான். அந்த கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள். கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்களை கட்டாயமாக மக்கள் கடைபிடிக்க வேண்டும். கூட்டம் கூடுகின்ற நிகழ்ச்சிகளை தவிருங்கள். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். முகக்கவசத்தை மறவாதீர். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தாமதிக்காமல் போட்டுக்கொள்ளுங்கள். முதல் டோஸ் போட்டவர்கள், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளுங்கள்.

புத்தாண்டையொட்டி  நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வெளியிட்ட காணொலி செய்தியில்,  தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய உடல் நலனும் உங்களுடைய முதலமைச்சரான எனக்கு மிகவும் முக்கியம். அதற்காகத்தான் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு தமிழ்நாட்டு மக்களான நீங்கள் நிச்சயமாக ஒத்துழைப்பு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அரசு அறிவித்திருக்கிற வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று உங்களுடைய முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களுடைய அன்பு சகோதரனாகவும், உங்களில் ஒருவனாகவும், மிகுந்த பணிவோடு நான் கேட்டுக் கொள்கிறேன். புத்தாண்டில் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவே நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த காணொலி, தமிழக மக்கள் மீது முதல்வர் கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது. முதல்வரின் பாசத்துக்கு, நேசத்துக்கு மக்கள் கட்டுப்பட்டால் ஒமிக்ரானை ஓட ஓட விரட்டிவிடலாம். இல்லையென்றால், இதைவிட கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டிய நிலைமை வரும். இதை உணர்ந்து பொறுப்போடு செயல்பட்டு ஒமிக்ரானை விரட்ட சூளுரை ஏற்போம்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • shortest-man-world-25

  மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

 • canata-storm-24

  வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

 • north111s

  உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்