தோட்டக்கலை துறை சார்பில் மாடி தோட்டம் அமைக்க விதை வினியோகம்
2021-12-31@ 00:48:18

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை மற்றும் சர்வோ சக்தி பெண்கள் கூட்டமைப்பு இணைந்து வீட்டில் மாடி தோட்டம் அமைப்பதற்கு விதை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் சாமுண்டீஸ்வரி ராஜா தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள் முனியாண்டி, சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்வோ சக்தி பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகி கலைச்செல்வி வரவேற்றார்.
இதில், தோட்டக்கலை துறை சார்பில் மூலிகை செடிகள் வளர்ப்பதன் அவசியம், செடிகள் வளர்க்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது மேலும் வேளாண் துறையில் தமிழக அரசால் வழங்கக்கூடிய மானியங்கள் அதை பெறும் வழிமுறைகள் குறித்து கூறி, அனைத்து பொதுமக்களும் பயன் பெற வலியுறுத்தப்பட்டது. மேலும், வீட்டில் மாடி தோட்டம் அமைக்க காய்கறி, கீரை விதைகள், மூலிகை செடிகள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகள்
திருமண மண்டபம் முன்பதிவு செய்ய வந்தபோது கார் கவிழ்ந்து மணப்பெண் பலி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாக சரிவு
திருமணமான காதலியை பார்க்க நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்த வாலிபர் சிக்கினார்
சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது லாரி மோதி விபத்து...
பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் 60 சதவீத மானியத்தில் கடனுதவி: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!