இரவில் தேவையின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை
2021-12-31@ 00:07:42

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமிக்ரான் வகை தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து, பாதுகாப்பு வழிமுறைகள் முழுமையாக கடைபிடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் விதிமீறல் இருக்கிறதா என கண்காணிக்க, மண்டலத்திற்கு, மூன்று அமலாக்க குழுக்கள் நியமிக்கப்படுகிறது. இந்த குழுவினர், இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். மேலும், கடைகள் இரவு 11 மணிக்குள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடைக்கு வருபவர்கள் திரும்ப, 12 மணி வரை நேரம் ஒதுக்கப்படுகிறது. அதன்பின், வருவோர் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவர். பிற அத்தியாவசிய தேவைகளுக்கு கட்டுப்பாடு இருக்காது. அதேவேளையில், தேவையின்றி வெளியே வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வழிபாட்டு தலங்களுக்கு செல்பவர்களும் சோதனைக்கு பின்தான் அனுமதிக்கப்படுவர். இதனால், அவர்களுக்கு கால விரயம் ஆகலாம் என்றார்.
Tags:
At night around police commissioner Shankar Jiwal alert இரவில் சுற்றினால் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கைமேலும் செய்திகள்
தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நெல்லை கண்ணன் மறைவுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இரங்கல்..!
ஆவடி தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி: முன்னேற்பாடுகள் குறித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை
மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...