மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் ஒற்றை காட்டு மாடு உலா
2021-12-23@ 12:35:15

மஞ்சூர் : மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் ஒற்றை காட்டு மாடு ஒன்று நடமாடி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மெரிலேண்டு பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் கடந்த சில தினங்களாக காட்டு மாடு ஒன்று நடமாடி வருகிறது. இதனால் தோட்டங்களில் இலை பறிக்கும் தொழிலாளர்களை கண்டால் விரட்டுவதாக கூறுகின்றனர். தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
இதேபோல் மஞ்சூர் பகுதியிலும் காட்டு மாடு ஒன்று பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. எனவே தொழிலாளர்களை அச்சுறுத்தும் காட்டு மாடை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
மதுரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனியை வீசி பாஜகவினர் அராஜகம்
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி ஊர்வலம்: இறுதிச்சடங்களுக்குப் பிறகு சொந்த ஊரில் உடல் அடக்கம்...
ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று மதுரை வந்தடையும்...அதிகாரிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!
செய்யூர் அருகே அதிமுக தலைவரின் மகனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கட்சியினர் திடீர் சாலை மறியல்
திருத்தணி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி; பயணிகள் கோரிக்கை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!