SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை சீரமைக்கும் பணி தீவிரம்

2021-12-21@ 14:15:08

குன்னூர் : குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்கம் பணி நடைபெற்ற இடத்தில் பிளவு ஏற்பட்டதால் தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பதினேழு இடங்களில் சாலை விரிவாக்க பணி தேசிய நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நடைபெற்று வருகிறது. இதே போன்று நூற்றுக்கும் மேற்பட்ட கழிவு நீர் செல்ல பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் கடந்த ஒன்பது மாத காலமாக முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் குன்னூர் காட்டேரி பார்க் பகுதியில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சாலை விரிவாக்க பணி நடைபெறும் போது   சாலையில் சுமார் 7 மீட்டர் வரை சாலையில் பிளவு ஏற்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் மட்டும்  கோத்தகிரி வழியாக  மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் கனரக வாகனங்கள் கோத்தகிரி வழியாக மாற்றம் செய்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வர கனரக வாகனங்கள் இந்து சாலையில் அனுமதிக்கப்படுகிறது. பிளவு ஏற்பட்ட பகுதியில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் ஒரு பகுதி அடைக்கப்பட்டுள்ளது.  நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்