இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம்,புதுச்சேரியில் மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்!!
2021-12-10@ 13:24:13

சென்னை : தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
'வடகிழக்கு பருவ காற்றின் (easterly trough) காரணமாக இன்று டிசம்பர் 10ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.டிசம்பர் 11ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
டிசம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.டிசம்பர் 13ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.டிசம்பர் 14ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
வானிலைமேலும் செய்திகள்
உடன்குடி பணியாளர் தற்கொலை சம்பவத்தில் வழக்கு பதிவு, விஷவாயு தாக்கி உயிரிழப்பது தடுக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!
பரத நாட்டிய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதா? தனியார் அறக்கட்டளை இயக்குநர் டிஜிபியிடம் விளக்கம்: தேசிய மகளிர் ஆணையம் புகாரால் பரபரப்பு
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அழைப்பு!
பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் மேலும் ஒருவர் கைது; 700 கிராம் தங்கம் பறிமுதல்
தந்தை சுப்பிரமணியம் மறைவை அடுத்து நடிகர் அஜீத்துக்கு நேரில் ஆறுதல் கூறினார் நடிகர் விஜய்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!