ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் நேரில் அஞ்சலி!!
2021-12-09@ 11:36:14

குன்னூர் : குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.
ராணுவ மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு பிறகு 13 பேரின் உடலும் ராணுவ வாகனத்தில் கொண்டுசெல்லபட்டு, வெலிங்டன் சதுக்கத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், வஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் செய்திகள்
நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை; மனித உடலை தகனம் செய்வதில் கூட பிரச்சனையா?: ஐகோர்ட் கிளை கேள்வி
கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது.: ஐகோர்ட் கிளை
கிராமங்களில் கோயில் திருவிழாவிற்கு காவல்துறையின் அனுமதி தேவை இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது; சிறையில் அடைப்பு
கோதையாறு மலைப்பாதையில் 15 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்-பயணிகள் இல்லாததால் விபரீதம் தவிர்ப்பு
பசுமை வளர்க்கும் விதமாக மலைப்பகுதியில் விதைப்பந்து தூவிய மாணவ, மாணவிகள்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!