சிறு, குறு தொழில்களுக்கான கடன் வழங்குவதில் விதிமுறைகள் எளிதாக்கப்பட்டிருக்கிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு
2021-12-09@ 11:07:53

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் பணிகளை டாய்கோ வங்கி (TAICO BANK) செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக எந்த நோக்கத்திற்காக இந்த வங்கி தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை மாற்றி அந்த வங்கியில் உள்ள பணத்தினை நகைக்கடன் வழங்குவது, வீட்டுமனை கடனுக்கு வழங்குப்பட்டு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படாத நிலை இருந்தது. இதனால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் எந்த நோக்கத்திற்காக டாய்கோ வங்கி தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்று முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதிற்கு பிறகு கிட்டத்தட்ட 75% நிதியை தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சிப்காட் பகுதியில் ஒரு ஆண்டுக்கு 12% உயர்த்திட வேண்டும் கடந்த ஆட்சியில் உத்தரவிட்டு இன்று நில மதிப்புகள் பலமடங்கு உயர்ந்து யாரும் வாங்க முடியாத சூழல் இருந்தது. இதனை சரிசெய்யும் விதமாக முதல்வர், நிலமதிப்பினை சுமார் 60% அளவிற்கு குறைத்து பல நிறுவனங்கள் தொழில் தொடங்க வாய்ப்பினை உருவாக்கியுள்ளார் என்று அமைச்சர் அன்பரசு தெரிவித்தார்.
தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு கடன் தொகை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 30 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. சிறு, குறு நிறுவனங்கள் எளிமையாக தொழில் தொடங்க முதலீட்டு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. பத்திரப்பதிவு செலவுகள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக கடன் வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். வங்கி நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார். வங்கி நிறுவனங்கள் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Tags:
தங்கம் தென்னரசுமேலும் செய்திகள்
2024 முதல் எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்க ஓலா நிறுவனம் திட்டம்: ஒரு கோடி இருசக்கர வாகனங்கள் தயாரிக்க நடவடிக்கை...
நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை; மனித உடலை தகனம் செய்வதில் கூட பிரச்சனையா?: ஐகோர்ட் கிளை கேள்வி
கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது.: ஐகோர்ட் கிளை
கிராமங்களில் கோயில் திருவிழாவிற்கு காவல்துறையின் அனுமதி தேவை இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது; சிறையில் அடைப்பு
கோதையாறு மலைப்பாதையில் 15 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்-பயணிகள் இல்லாததால் விபரீதம் தவிர்ப்பு
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!