நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
2021-12-09@ 00:47:52

சென்னை: தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் வழங்குதல், காலி பதவியிடங்களாக உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஆகியவற்றை விரைந்து நிரப்பிடவும், தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது, கோவிட் தடுப்பு மருத்துகள் பெறுதல், விநியோகம் செய்தல் குறித்தும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி குறித்த விவரங்களை பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக இயக்நர்களுக்கு வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்காக மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் இன்று (9.12.2021) தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்களாலும் வெளியிடப்படும். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மாவட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்; இபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கினர்
அதிமுகவில் 4 பிரிவுகளாக இருக்கிறார்கள்; இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை.! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
அனைவரும் ஒன்றுபட வேண்டும்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பள்ளிகளில் மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பு இயக்க துவக்க விழா: பள்ளிக்கல்வித்துறை
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியை எம்.ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது: ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!