வாலாஜா அடுத்த நாராயணகுப்பம் கிராமத்திற்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடக்கம்-பொதுமக்கள் மகிழ்ச்சி
2021-12-08@ 14:29:31

வாலாஜா : வாலாஜா அடுத்த நாராயணகுப்பம் கிராமத்திற்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பஸ்சை வரவேற்றனர்.
வாலாஜா அடுத்த நாராயணகுப்பம் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவ்வாறு வசிப்பவர்கள் தங்களின் தேவைக்களுக்காக சுற்றுப்புற நகரங்களான வாலாஜா மற்றும் ராணிப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு தினமும் வந்து செல்கின்றனர். அதில் வந்து செல்பவர்களுக்கு பஸ் வசதி இல்லாததால், வாங்கூர் மற்றும் இடையந்தாங்கல் ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்கிருந்து சுமார் 1 கி.மீ தூரம் நடந்து சென்று பஸ் பிடித்து சென்று வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் நாராயணகுப்பம் கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதற்கிடையே அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி தலைமையில் அமைச்சர் ஆர்.காந்தியிடம் கடந்த மாதம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இதையடுத்து அமைச்சர் ஆர்.காந்தி போக்குவரத்துத் துறை அதிகாரியை தொடர்பு கொண்டு நாராயணகுப்பம் கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தித்தர கூறினார்.
அதன்படி நேற்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஆற்காட்டிலிருந்து, நாராயணகுப்பம் கிராமத்திற்கு நேரடி பஸ் போக்குவரத்தை அமைத்தனர்.
இதைத்தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு தங்களின் கிராமத்திற்கு வந்த அரசு பஸ்சை அக்கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரத்தி எடுத்து வரவேற்றும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!